»   »  டிவி சீரியல்கள் ஏன் பெண்களை வில்லியாகவே சித்தரிக்கின்றன? நீதிபதி கிருபாகரன் வேதனை

டிவி சீரியல்கள் ஏன் பெண்களை வில்லியாகவே சித்தரிக்கின்றன? நீதிபதி கிருபாகரன் வேதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்மைக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்கள், குடும்ப பெண்களின் உயர் பண்புகளை கெடுக்கும் வகையில் பெண்களை வில்லியாகச் சித்திரிக்கின்றன. பாசம், வன்முறை, கெட்ட எண்ணத்தை தூண்டும் காட்சிகள் அதிக அளவில் இடம்பெறுகின்றன என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனையுடன் கூறியுள்ளார்.

இன்றைக்கு டிவி சீரியல்களில் பெண்களின் ஆதிக்கம்தான் அதிகரித்துள்ளது. ஒரு பெண் ஹீரோயினாகவும், ஒரு பெண் கொடூர குணம் கொண்ட வில்லியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.

women as villis in TV serials Says Justice Kirubakaran

இன்றைக்கு சீரியல் ஹீரோயின்களை விட வில்லிகளைத்தான் அதிகம் பிடிக்கிறது. இந்த வில்லிகள் நீதிபதி கிருபாகரனைக் கூட அதிகம் பாதித்துள்ளனர். அதனால்தான் கபாலி வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி வேதனையுடன் சில விசயங்களை திரைப்படம், சீரியல் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நீதிபதி கிருபாகரன் கூறியதாவது, முந்தைய காலகட்டத்தில் திரைப்படங்கள் தேசப்பற்றை மக்கள் மத்தியில் உருவாக்குவது, நல்ல கருத்துகளைப் போதிப்பது போன்ற நற்செயல்களில் ஈடுபட்டன. ஆனால், அண்மைக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்கள், குடும்ப பெண்களின் உயர் பண்புகளை கெடுக்கும் வகையில் பெண்களை வில்லியாகச் சித்திரிக்கின்றன.

பாசம், வன்முறை, கெட்ட எண்ணத்தை தூண்டும் காட்சிகள் அதிக அளவில் இடம்பெறுகின்றன. கொடூர குற்றவாளி கதாபாத்திரங்களில் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கின்றனர். இது ரசிகர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறது. குற்றம் செய்வது தப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் போன்ற நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் வகையில் நடித்தனர். அவர்களது திரைப்படங்கள், சமுதாயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை உருவாக்கியது. ஆனால், இப்போது சமுதாயத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கு சினிமாதான் காரணம் என்று கூறினார் நீதிபதி கிருபாகரன்.

முன்னணி கதாநாயகர்கள், கெட்டவனாக நடிப்பதற்கு முன்பு, தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். மதுகுடிப்பது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை கதாநாயகர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.


English summary
Justice Kirubakaran Pointing out how television serials are bent upon destroying family values by portraying women as ‘villis,' the judge said that, movies, of late, portrayed mainly obscenity, violence, victory of evil over good and other negative themes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil