»   »  டிவி சீரியல் ஷூட்டிங்கில் குடுமிபுடி சண்டையா: நடிகை விளக்கம்

டிவி சீரியல் ஷூட்டிங்கில் குடுமிபுடி சண்டையா: நடிகை விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பேபி ருஹானிகாவுக்கும், தனக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை நடிகை அதிதி பாட்டியா தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரான ஏ ஹை முஹப்பதைனில் நடித்து வருபவர் அதிதி பாட்டியா(17). அவர் அதே தொடரில் நடிக்கும் 9 வயதான பேபி ருஹானிகாவுக்கு நடிக்கத் தெரியவில்லை என்று கூறினாராம்.

இதை கேட்டுவிட்டு அங்கு நின்று கொண்டிருந்த ருஹானிகாவின் அம்மா அதிதியுடன் சண்டைக்கு பாய்ந்தார் என்றும், இருவரும் மல்லுக்கட்டினார்கள் என்றும் செய்திகள் வெளியாகின.

இல்லை

இல்லை

சண்டை செய்தி வெளியான நேரத்தில் அதிதி ருஹானிகாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரச்சனை எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

நான் ருஹானிகாவின் நடிப்புத் திறன் பற்றி எதுவும் பேசவில்லை. நான் குழந்தையாக இருந்ததில் இதுவரை 17 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். அப்படி இருக்கும்போது கேமராவுக்கு முன்பு ஒரு குழந்தை நின்று நடிப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்கிறார் அதிதி.

தைரியம்

தைரியம்

குழந்தையாக இருந்து கொண்டு கேமராவுக்கு முன்பு நின்று நடிக்க தைரியம் தேவை. ருஹானிகா ஒரு அருமையான நடிகை. அவரை எப்பொழுதுமே நான் பாராட்டியுள்ளேன் என அதிதி தெரிவித்துள்ளார்.

வார்த்தை

வார்த்தை

நான் ருஹானிகா பற்றி எதுவும் தவறாக பேசவில்லை. யாராவது எதையாவது கேட்டு தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. தவறாக எதையாவது புரிந்து கொண்டு செயல்படும் முன்பு நானும் சிறுமி தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அதிதி கூறியுள்ளார்.

தங்கை

தங்கை

ருஹானிகாவை நான் என் தங்கை போன்று நினைக்கிறேன். என்னை விட பெரியவர்களோ, சிறியவர்களோ யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும் என என் அம்மா சொல்லிக் கொடுத்துள்ளார் என்கிறார் அதிதி.

English summary
Yeh Hai Mohabbatein actress Aditi Bhatia said that all is well between her and her co-star Ruhania. Earlier it was reported that fight happened on the sets of Yeh Hai Mohabbatein between Aditi Bhatia and Ruhanika's mother.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil