ஏங்க.. ஜீ தமிழில் முதலிரவு கொண்டாடும் கூமாப்பட்டி தங்கபாண்டி.. ப்ரோமோவே வேற லெவல்ல இருக்கே!

சென்னை: சமூக வலைதளங்கள் மூலம் பலரும் பிரபலமாகி இருக்கிறார்கள். அதுவும் சிலர் ஊரே கொண்டாடும் வகையில் பிரபலமாக உருவாகி உள்ளார்கள். சிலர் தூற்றும் அளவுக்கும் பிரபலமாகி உள்ளார்கள். சமூக வலைதளங்களில் கொச்சையாக பேசினால், ஆபாசமாக பேசினால் பிரபலமாகி விடலாம் என்ற யுத்தியை பின்பற்றுபவர்களுக்கு மத்தியில், கூமாபட்டி தங்கபாண்டி தனது பெயருக்கு ஏற்றபடியே தங்கம் என பலரும் கூறும் அளவுக்கு நடந்து கொள்கிறார்.

கூமாப்பட்டி என்ற தனது கிராமத்தை சமூக வலைதளத்தின் மூலம், பிரபலப்படுத்தியது மட்டும் இல்லாமல், தனக்கென ஒரு பாணியை உருவாக்கி இன்றைக்கு பிரபலமாக உருவாகி உள்ளார். இவர் 'ஏங்க....அ...' எனக் கூறினாலே இப்போது கூமாப்பட்டி தங்கராஜ் தான் நியாபகத்துக்கு வருவார். போகிற போக்கைப் பார்த்தால், ஏங்க என்ற சொல்லுக்கு அவர் காப்பிரைட் கேட்டு விடுவார் போல என்று பலரும் கிண்டலாக கூறும் அளவுக்கு உள்ளார்.

Zee Tamil Koomapatti Thanga Pandi Dance With Chandini Prakash at First Night Song Single Pasanga Show
Photo Credit:

தனது சமூக வலைதள பிரபல்யத்தை வைத்து பிரபல நகைக்கடை விளம்பரங்களில் நடித்தது, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியான, ' சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் அவரது பேச்சு மற்றும் ஆக்டிவிட்டிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல், அவர் அளித்த சில பேட்டிகளில், தான் அதிகம் புத்தகங்கள் வாசிப்பதாகவும், சில புத்தகங்களை ரசிகர்களுக்கு பரிந்துரைக்கவும் செய்தார்.

சிங்கிள் பசங்க: இந்நிலையில் அவர் கலந்து கொண்டுள்ள சிங்கிள் பசங்க நிகழ்ச்சியின் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது அவர் சின்னத்திரை பிரபலம் சாந்தினி பிரகாஷ் உடன் இணைந்து கொண்டு, சூரியவம்சம் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்கள். அது தொடர்பான ப்ரோமோக்களை ஜீ தமிழ் தரப்பில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்கள். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Zee Tamil Koomapatti Thanga Pandi Dance With Chandini Prakash at First Night Song Single Pasanga Show
Photo Credit:

முதலிரவு ஆட்டம்: சினிமாவில் இடம் பெற்றுள்ள பாடலில் எப்படி முதலிரவுக் காட்சி என்பது சுட்சுவேஷன் பாடலாக உருவாக்கப்பட்டிருந்ததோ, அதேபோல், இந்த நிகழ்ச்சியிலும் இந்த பாடல் அதேபோல் காட்சியாப்பட்டுள்ளது. மனைவிக்கு முதலிரவில் கால் பிடித்து விடுவது போல எல்லாம் காட்சி எடுத்துள்ளார்கள். அது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சில ரசிகர்கள் கிண்டலாக ஏங்க.. கூமாப்பட்டி தங்கராஜோட முதலிரவு கொண்டாட்டத்தைப் பாருங்களேன் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவரது நடனம் தொடர்பான புகைப்படங்களைப் பார்த்த பலரும் என்ன இந்த குத்து குத்துறாரு என்றும், கூமாபட்டி தங்கராஜ் மேலும் மேலும் வளரட்டும் என்று வாழ்த்தியும் வருகிறார்கள். சிங்கிள் பசங்க நிகழ்ச்சி ஜீ தமிழ் சேனலில் இன்று அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X