மூச்சு திணறி இறந்த நவீன்? துர்கா எடுத்த விபரீத முடிவு.. கார்த்திகை தீபம்!

சென்னை: நவீனை, சிவனாண்டியும் அவனது சித்தப்பாவும் அடித்து குழி தோண்டி ஒரு பெட்டியில்வைத்து புதைத்துவிடுகின்றனர். அந்த பழியை சாமுண்டீஸ்வரி மீது போட போலீசார் சாமுண்டீஸ்வரியை கைது செய்து விசாரிக்கின்றனர். அப்போது,பெட்டிக்குள் இருக்கும் நவீனுக்கு மயக்கம் தெளிகிறது. அந்த நேரம் தன்னிடம் இருக்கும் ஃபோனில் இருந்து கர்த்திக்கிற்கு போன் செய்து, தன்னை சிவனாண்டியும், அவனுடைய சித்தப்பாவும் அடித்து மயக்கமடையச் செய்து பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டார்கள். இந்த பழியை அத்தை சாமுண்டீஸ்வரி மீது போட பார்க்கிறார்கள் என்கிறான்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திக், தயவு செய்து பயப்படாதே, நான் நிச்சயம் நீ இருக்கும் இடத்திற்கு வந்து விடுகிறேன். நீ பயந்தால், உன்னால் பெட்டிக்குள் மூச்சுவிட முடியாது தயவு செய்து அமைதியா இரு என சொல்லிவிட்டு, தன்னுடைய போலீஸ் நண்பன் சரவணனுக்கு ஃபோன் செய்து உதவி கேட்கிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக், மீண்டும் நவீனுக்கு போன் செய்து, கடைசியாக சிவனாண்டியை எந்த இடத்தில் பார்த்த, மேலும் வெளியில் ஏதாவது சத்தம் கேட்குதா என கேட்கிறான். அப்போது, நவீன் பக்கத்தில் ஏதோ கோவில் இருக்கும் என நினைக்கிறேன், கோவில் மணி சத்தம் கேட்கிறது என்று சொல்ல கார்த்திக் அதை வைத்து நவீனை தேட தொடங்குகிறான். பின் ஃபேக்டரி அருகே இருக்கும் கோவிலுக்கு வந்து அங்கிருக்கும் கோவிலில் மணி இருக்கிறதா என்று பார்க்கிறான் . ஆனால், அந்த கோவிலில் மணி இல்லை. அடுத்ததாக, கார்த்திக் மீண்டும் நவீனுக்கு போன் செய்து, அந்த போனில் இதற்கு முன் யாரிடம் இருந்து போன் வந்து இருக்கு என்று பார் என்கிறார். அந்த நம்பரை வைத்து அட்ரஸை கண்டுபிடித்து அங்கு சென்று விசாரிக்க ரவுடியின் மனைவி அவர் வீட்டில் இல்லை என்று சொல்கிறாள்.

பிறகு, நவீனிடம் இருக்கும் போன் யாருடைய என்று கண்டுபிடித்து செல்ல, அந்த ரௌடி சரக்கு அடித்துவிட்டு, மட்டையாகி போதையில் இருக்கிறான். அவனிடம் உன் போன் எங்கடா என்று விசாரிக்க அவன் என் ஃபோன் எங்கன்னு தெரியல என்று சொல்கிறான். இப்படி கார்த்திக் ரௌடிகளிடம் விசாரணை நடத்தி வரும் விஷயம் சந்திரகலாவுக்கு தெரியவருகிறது. உடனே சந்திரகலா, சிவனாண்டிக்கு போன் செய்து, நவீனை குழியில் புதைப்பதற்கான நீ அனுப்பிய ஆள், அந்த குழியில் செல்போனையும் சேர்ந்து புதைத்து இருக்கிறான்.

துர்கா விபரீத முடிவு: அந்த விஷயத்தை நவீன், கார்த்க்கிடம் சொல்லிவிட்டான். உடனடியாக நவீனிடம் இருக்கும் போனை பிளாக் செய்ய வேண்டும் என்கிறாள். அதுமட்டுமில்லாமல் துர்காவிற்கு போன் செய்து நவீன் இறந்து விட்டதாக தகவல் கொடுக்கிறாள். நவீன் இறந்து விட்டதாக வந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த துர்கா, இதுக்கு மேல நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும், என் அம்மாவே இப்படி செய்துவிட்டார்களே, இனிமே நான் உயிரோட இருக்க மாட்டேன் என்று சொல்லி பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுகிறாள். இதனால் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X