மாட்டிக்கொண்ட மாயா.. ஆதாரத்துடன் கட்டம் கட்டிய கார்த்திக் - கார்த்திகை தீபம்!
சென்னை: மருத்துவமனையில் கான்ஸ்டபிளை முத்துப்பாண்டி, சிவனாண்டி இருவரும் சேர்ந்து கொன்றுவிடுகின்றனர். அந்த நேரம் கார்த்திக் வர, கான்ஸ்டபிள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததைப் பார்த்த கார்த்திக், மருத்துவரிடம் சொல்ல,மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக சொல்கிறார். இதை கேட்டு பரமேஸ்வரி பாட்டி, கார்த்தி இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போது, பரமேஸ்வரி பாட்டி, பிரிந்துபோய் இருக்கும் குடும்பம் இவன் மூலமாக சேர்ந்துவிடும் என நினைத்தேன். ஆனால், இப்படி ஆகிவிட்டதே என வருத்தப்படுகிறாள். அப்போது, கார்த்திக் பயப்படாதீங்க பாட்டி, அந்த கான்ஸ்டபிள் இறக்கும் போது, ஏதோ செல்போன் செல்போன்-னு சொல்லிட்டே இருந்தாரு, அவருடைய செல்போனில் ஏதோ ஒரு ஆதாரம் இருக்கு என்று எனக்கு தோன்றுகிறது. அந்தபோன் கைக்கு வந்தால், உண்மை தெரியும் என சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கான்ஸ்டபிள் உயிரிழந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக சாமுண்டீஸ்வரி இல்லத்திற்கு போலீசார் வருகின்றனர். அப்போது சந்திரகலா, அந்த கான்ஸ்டபிள் சண்முகத்தை மண்டபத்தை அழைத்து வந்தது பரமேஸ்வரி தான். இதனால் எங்களுக்கும் அதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. நீங்கள் விசாரணை நடத்த வேண்டும் என்றால், அங்கே போய் தான் விசாரணை நடத்துங்கள் என்று சொல்ல. போலீசார் பரமேஸ்வரி வீட்டிற்கு விசாரணை நடத்துவதற்காக செல்கின்றனர். சந்திரகலா பேசியதை கேட்ட ராஜராஜன், என் அம்மா மீது பழிபோடுவதே உன்னுடைய வேலையா போச்சு, அவங்க, கான்ஸ்டபிள் சண்முகத்தை அழைத்து வந்தாங்க, ஆனால், அவங்களை துப்பாக்கியால் சுட்டது யாருனு தெரியாத போது, ஏன் என் அம்மாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோவத்தில் கத்துகிறான். இதை கேட்டு சந்திரகலா,ஓ.... இன்னும் உங்களுக்கு உங்க அம்மா மேல இவ்வளவு பாசம் இருக்கா, அக்கா நல்லா கேட்டுக்கோ என்னைக்கா இருந்தாலும் உன் புருஷன் அங்கே போய்விடுவார் என்று சொல்கிறாள்.
ஜெயில் பரமேஸ்வரி: பரமேஸ்வரி வீட்டுக்கு செல்லும் வரும் போலீசால் கான்ஸ்டபிள் உயிரிழந்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என சொல்லி பரமேஸ்வரியை கைது செய்து அழைத்து செல்கின்றனர். இதையடுத்து நவீன், கார்த்திக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல கார்த்திக் பதறிக்கொண்டு காவல்நிலையத்திற்கு செல்கிறான். கார்த்தியை பார்த்த பரமேஸ்வரி பாட்டி, இரண்டு குடும்பமும் ஒன்னா வாழ வேண்டும் என ஆசைப்பட்டேன் கடைசியில் பாட்டிக்கு வந்த நிலைமையை என கண்கலங்குகிறாள்.
ஆதாரம் சிக்கியது: பிரச்சனை வேறுவிதமாக சென்றதால், கான்ஸ்டபிளை சுட்டது யார் என்ற ஆதாரத்தை தேட தொடங்குகிறார். அப்போது மண்டபத்தில் இருந்த சிசிடிவி ஆதாரங்களை பரிசோதனை செய்யும்போது பர்தா போட்ட பெண் கான்ஸ்டபிலை சுட்டுக்கொன்றது தெளிவாக தெரிகிறது. பிறகு அந்தப் பெண் மாயா என்பது தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து கார்த்திக் மகேஷ் குறித்து தெரிந்த நர்ஸை மாயாவிடம் பேச வைத்து ஒரு இடத்திற்கு வரவைத்து மடக்கி பிடிக்கின்றனர். நீ தானே கான்ஸ்டபிள் கொன்ன என்று கேட்க மாயா இல்லை என்று மறுக்க வீடியோ ஆதாரத்தைக் காட்டி அதிர்ச்சி கொடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











