»   »  விடாது விரட்டும் வில்லி கல்பனா.... வேதவல்லியின் திருமணம் நடக்குமா?- தலையணைப்பூக்கள் சஸ்பென்ஸ்

விடாது விரட்டும் வில்லி கல்பனா.... வேதவல்லியின் திருமணம் நடக்குமா?- தலையணைப்பூக்கள் சஸ்பென்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த சீரியலை எடுத்தாலும் அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கும் கதைதான். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் தலையணைப் பூக்கள் சீரியலில் நாயகி வேதவல்லியின் திருமணம் நடக்குமா நடக்காதா என்பதுதான் இப்போது சஸ்பென்ஸ் ஆக உள்ளது.

மனைவியை இழந்த தொழிலதிபர் ராமநாதனுக்கு சுந்தர்ராஜன், நாகராஜன், நடராஜன் மூன்று மகன்கள். சென்னையில் லட்சுமி அன் கோ என்ற மிகப்பெரிய தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.

ராமநாதனும் பரமேஸ்வனும் நண்பர்கள் என்பதால் சிறுவயதில் இருந்தே நண்பனின் மகள் வேதவல்லியை தன் வீட்டு மருமகளாக்க வேண்டும் என்பது ராமநாதனின் விருப்பமாக உள்ளது. எனவே தனது மூத்த மகன் சுந்தரராஜனுக்கு வேதவல்லியை நிச்சயம் செய்கின்றனர்.

கல்பனாவின் வில்லத்தனம்

கல்பனாவின் வில்லத்தனம்

அதே நேரத்தில் லட்சுமி அன் கோ நிறுவனத்தில் வேலை செய்யும் கல்பனாவிற்கு ராமநாதன் மூத்த மகன் சுந்தரராஜன் மீது ஒருதலைக்காதல். இதற்காக நாடகம் போட்டு சுந்தராஜன் கையினால் தாலி கட்டிக்கொள்கிறாள் கல்பனா.

வேதவல்லிக்கு டாக்டர் மாப்பிள்ளை

வேதவல்லிக்கு டாக்டர் மாப்பிள்ளை

திருமணத்திற்குப் பின்னரும் சுந்தர்ராஜன் வேதவல்லியுடன் பேசுவது கல்பனாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, இருவரையும் அவமானப்படுத்துகிறாள். இதற்காகவே வேதவல்லிக்கு டாக்டர் மாப்பிள்ளையுடன் திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது.

கண்ணீருடன் காத்திருப்பு

கண்ணீருடன் காத்திருப்பு

திருமணம் எப்படியாவது நிற்க வேண்டும் என்று நினைக்கிறாள் கல்பனா. மண நாளில் வெளியே சென்ற மாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியாக திருமணம் நிற்கும் நிலைக்கு வருகிறது. வேதவல்லி கண்களில் கண்ணீருடன் மணக்கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்.

மகனிடம் கெஞ்சும் ராமநாதன்

மகனிடம் கெஞ்சும் ராமநாதன்

மகளின் மானத்தை காக்க ராமநாதனால் மட்டுமே முடியும் என்று நினைத்த வேதவல்லியின் அப்பா, ராமநாதனின் மகன் நாகராஜனை எப்படியாவது திருமணம் செய்து கொடு என்று கெஞ்சுகிறார். உடனே நாகராஜனை அழைத்து பேசி சம்மதம் கேட்கிறார் ராமநாதன்.

அதிர்ச்சியில் கல்பனா

அதிர்ச்சியில் கல்பனா

இது கல்பனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று நினைக்கும் கல்பனா, திருமணம் நடைபெறும் இடத்திற்கு மல்லிகாவை வரவழைக்க முயற்சி செய்கிறாள்.

நீடிக்கும் சஸ்பென்ஸ்

நீடிக்கும் சஸ்பென்ஸ்

அப்பாவின் பேச்சை நாகராஜன் கேட்பானா? மனதில் நினைத்த மல்லிகாவை விட்டு விட்டு வேதவல்லி கழுத்தில் நாகராஜன் தாலி கட்டுவானா? கல்பனாவின் எண்ணம் நிறைவேறுமா என்று பல கேள்விகளுக்கு விடை தருகிறது தலையணைப் பூக்கள் சீரியல்.

சான்ட்ரா வில்லத்தனம்

சான்ட்ரா வில்லத்தனம்

இந்த தொடர் எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் கதைக்கருவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் டெல்லி குமார்,ஸ்ரீ, ஸ்ரீ கர், நிஷா, சான்ட்ரா, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சான்ட்ராவின் வில்லத்தனம் சற்றே கொடூரமாகவே இருக்கிறது.

English summary
Fans are eagerly waiting to see Vedavalli marriage in Thalayanai pookal tv serial on Zee Tamil TV.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil