சேது வெற்றியே போதும்.. நீங்க பாவம்.. தேவயானி கணவரை அசிங்கப்படுத்திய விக்ரமின் மனைவி.. ஆத்தாடி

சென்னை: விக்ரம் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர். அவர் ஹிட் கொடுத்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும் அவரது படம் என்றாலே அனைவருக்குமே எதிர்பார்ப்பு நிலவுவது உண்மை. கடைசியாக அவரது நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக மண்டேலா இயக்குநரான மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது மனைவி இயக்குநரும், தேவயானியின் கணவரை ராஜகுமாரை அசிங்கப்படுத்திய விஷயம் தெரியவந்திருக்கிறது.

சினிமாவில் பல கஷ்டங்களை சந்தித்தவர் விக்ரம். அவரது உறவினர்களான பிரசாந்த்தும், தியாகராஜனும் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்தபோது உள்ளே வந்தார் இவர். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து விக்ரமுக்கு ஆதரவு கரங்கள் நீளவில்லை என்று சொல்லப்படுவதுண்டு. அதிலும் விபத்து ஒன்றில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்தபோதுகூட அவர்கள் இவரை கண்டுகொள்ளவில்லை என்றும் ஒரு பேச்சு உண்டு.

தரமான ஹீரோ விக்ரம்: அப்படிப்பட்ட நிலைமையில்தான் வைராக்கியத்தோடு சேது படத்தில் நடித்தார் விக்ரம். பாலா இயக்கத்தில் உருவான முதல் படம் அது மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விக்ரமுக்கும் தமிழ் சினிமாவில் வலுவான எதிர்காலத்தை அமைத்து கொடுத்தது. அப்படி அவர் நடித்த பிதாமகன், தில், தூள், சேது, ஜெமினி, காசி, சாமி, அந்நியன் என வரிசையாக படங்கள் ஹிட்டடித்தன. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அந்தப் படங்களுக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தன. ஒருகட்டத்தில் பிரசாந்த்தைவிடவும் விக்ரம் வளர்ந்தார்.

Actress Devayani s husband Rajakumaran was humiliated by Vikram s wife

ஹிட் எதுவும் இல்லை: கரியர் பீக்கில் சென்றுகொண்டிருந்தது. ஆனால் திடீரன அவருக்கு வரிசையாக தோல்வி படங்களாகவும், சுமார் ரக படங்களாகவும் அமைந்தன. அவரிடம் சென்றே நீங்கள் எப்போது கடைசியாக கமர்ஷியல் ஹிட் கொடுத்தீர்கள் என கேட்டால் அவரே கொஞ்சம் யோசித்துதான் பதில் சொல்லும் நிலைமை நிலவுகிறது. இருப்பினும் சியான் விக்ரமை துளிகூட விட்டுக்கொடுக்காமல் இன்னமும் கொண்டாடித்தான் வருகிறார்கள் அவரது ரசிகர்கள். அது ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.

அடுத்த படங்கள்: பா.இரஞ்சித் இயக்கத்தில் நடித்த தங்கலான், அருண்குமார் இயக்கத்தில் நடித்த வீர தீர சூரன் ஆகிய இரண்டு படங்களையும் அவரும், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள். எப்படியாவது விக்ரம் என்ற திறமைசாலி மீண்டும் கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமாகவும் இருந்தது. ஆனால் அவ்விரண்டு படங்களுமே போதிய வரவேற்பை பெறவில்லை. அதுவும் தங்கலான் படம் யாரிடமும் சுத்தமாகவே கனெக்ட் ஆகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அசிங்கப்படுத்திய விக்ரம் மனைவி: இந்நிலையில் விக்ரமை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கிய தேவயானியின் கணவர் ராஜகுமாரன் அளித்த பேட்டி பேசுபொருளாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "சேது படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 80 கதைகளை கேட்டுவிட்டு அது எதுவும் பிடிக்காமல் விக்ரம் ஓகே சொன்ன படம்தான் விண்ணுக்கும் மண்ணுக்கும். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. பட ரிலீஸாகி இரண்டு, மூன்று நாட்கள் கழித்து விக்ரமுக்கு ஃபோன் செய்தேன். அப்போது அவரது மனைவி ஃபோனை வாங்கி, 'சேது கொடுத்த வெற்றியே இன்னும் ஐந்து வருடங்களுக்கு அவருக்கு தாங்கும். நீங்கள்தான் என்ன செய்யப்போறீங்க என்று தெரியவில்லை. பாவம் என கூறினார். அந்தக் கசப்பு இன்னும் என்னிடம் இருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X