Ajith - இயக்குநருக்கு விஜய் செய்த ஃபோன்.. அருகில் இருந்த அஜித் செய்த சேட்டை.. ஏகே இப்படியும் செஞ்சிருக்காரா?

சென்னை: விஜய்யும், அஜித்தும் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகர்கள். அவர்களுக்கென்று பெரும் படையே ரசிகர் பட்டாளமாக இருக்கிறது. இரண்டு பேரில் ஒருவரின் கவனம் அரசியலிலும் இன்னொருவரின் கவனம் கார் ரேஸிலும் சென்றிருக்கிறது. இதனால் விரைவில் அவர்கள் நடிப்பது படிப்படியாக குறைய வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தெரியவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் விஜய்யும், அஜித்தும் ஒரே காலகட்டத்தில்தான் நடிக்க வந்தார்கள். ராஜாவின் பார்வையிலே படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கவும் செய்தார்கள். ஆனால் அதற்கு பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை. இரண்டு பேரும் தனித்தனி வழியில் பயணித்து தங்களுக்கான சாம்ராஜ்ஜியத்தை எழுப்பிக்கொண்டார்கள். வெற்றி, தோல்வி என கலந்து பயணித்த அவர்களுக்கு தமிழ்நாட்டில் பெரும் படை ரசிகர்களாக இருக்கிறது.

இப்போதைய படங்கள்: விஜய் கடைசியாக GOAT படத்திலும், அஜித் குட் பேட் அக்லி விடாமுயற்சி படங்களிலும் நடித்திருந்தார்கள். இரண்டு பேருக்குமே அந்தப் படங்கள் பெரிய வெற்றியெல்லாம் இல்லை. அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அஜித்தோ ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Teased Assistant Director when Vijay s During a Phone Call A Funny Throwback Story Goes Viral
Photo Credit:

வெவ்வேறு பயணங்கள்: முக்கியமாக 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான அவர்கள் இப்போது வெவ்வேறு துறைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். அஜித்தோ கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதன் காரணமாக இனி வரும் காலங்களில் அவர்களது நடிப்பு பயணம் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

போட்டியானாலும் நண்பர்கள்தான்: இதற்கிடையே கோலிவுட்டில் சிவாஜி - எம்ஜிஆர், ரஜினி - கமல் ஆகியோருக்கு பிறகு விஜய் - அஜித் போட்டிதான் பலமாக நடந்தது. கரியரின் ஆரம்பத்தில் இரண்டு பேருமே தங்களது படங்களில் இடம்பெற்றிருந்த பாடல்களை வைத்து மறைமுகமாக தாக்கிக்கொண்டார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் நண்பர்களாக நெருக்கமாகிவிட்டார்கள். இந்நிலையில் அஜித் செய்த செயல் ஒன்று தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த முத்துவடுகு என்பவர் விஜய்யிடம் முரசு என்ற கதையை சொல்லி படம் இயக்க கமிட்டாகியிருந்தாராம். அந்த சமயத்தில் பேரரசு இயக்கத்தில் அஜித் நடித்த திருப்பதி படத்திலும் அவர் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை செய்துகொண்டிருந்தாராம். ஒருமுறை கேரவனில் அமர்ந்தபடி அஜித்துக்கு திருப்பதி பட கதை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தாராம்.

விஜய் செய்த ஃபோன்: அப்போது விஜய் முத்துவடுகுக்கு ஃபோன் செய்ய; அதை பார்த்துவிட்ட அஜித், 'எங்கேயும் போகக்கூடாது. இங்கேயே இருந்தபடி பேசுங்கள்' என சொல்ல; முத்துவும் பேசியிருக்கிறார். ஆனால் அஜித்தோ, 'முத்துவடுகுவின் கவனத்தை சிதறடிக்கும்படி வேண்டுமென்றே, 'இந்த டயலாக் என்ன, நாளை ஷூட்டிங் இருக்க, அடுத்து என்ன சீன் எடுக்கிறோம்' என சிரிப்பை அடக்கியபடி கேட்டுக்கொண்டே இருந்தாராம். ஒருவழியாக படாத பாடு பட்டு விஜய்யிடம் ஃபோனை பேசிவிட்டு வைத்தாராம் முத்துவடுகு. இதனை ஏகே சிரியஸாக செய்யவில்லையாம். சும்மா ஒரு ஃபன்னுக்காக செய்தார் என்று முத்துவே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இது ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X