சில்க் ஸ்மிதா குடித்து வைத்த மிச்ச கூல்டிரிங்ஸ்.. தொட்டு தொட்டு ருசித்த பெரிய மனிதர்கள்.. பிரபலம் ஓபன்
சென்னை: மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து பல தகவல்கள் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. இது மட்டும் இல்லாமல், படப்பிடிப்புத் தளத்தில் சில்க் ஸ்மிதாவை பார்க்க முண்டியடித்துக் கொண்டு இருந்த அந்த தலைமுறையினர் தான் இன்றைக்கு 2கே கிட்ஸ்களுக்கும் ஜென் ஜி கிட்ஸ்களுக்கும் ஒழுக்கப் பாடம் எடுத்து கொண்டு இருக்கிறார்களா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. இப்படி இருக்கும்போது நடிகை சில்க் ஸ்மிதாவை பார்ப்பதற்காக முண்டியடித்த ரசிகர்களில், சில ஊர் பெரிய மனிதர்கள் செய்த செயலைக் கேட்டால், இப்படியெல்லாமா நடந்து கொள்வார்கள் என்று புருவம் உயர்த்தை வைக்கிறது.
நடிகர் விஜய்க்கு கூட்டம் கூடுகிறது, அரசியலில் அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்று மூத்த இயக்குநர் வி. சேகரை நோக்கி கேள்வி எழுப்பப்பட்டதற்கு அவரது பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, கூட்டம் காட்டிவிட்டார் என்பதற்காக அவர் ஆட்சியைப் பிடித்து விட்டார் என்று இல்லை. நான் சில்க் ஸ்மிதாவை வைத்து எனது முதல் படத்தை எடுத்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பை பார்க்க அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து எல்லாம் ரசிகர்கள் வந்துவிட்டார்கள். சில்க் ஸ்மிதா குடித்துவிட்டு மிச்சம் வைத்த கூல்டிரிங்ஸை தொட்டு தொட்டு சுவைத்த ஊர் பெரிய மனிதர்கள் எல்லாம் இருந்தார்கள். இது எல்லாம் திரை கவர்ச்சிதான். திரைக்கவர்ச்சியும் அரசியலும் ஒன்றாகி விடாது.

விஜய்: தொடர்ந்து அவர் பேசுகையில், விஜய் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை ஒப்பிட்டு பேசினார். அதாவது, எம்.ஜி.ஆர் படங்களில் அவர் மது அருந்துவது போன்ற காட்சியை பார்க்க முடியுமா? திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் மது அருந்துவது போன்ற காட்சியில் நடிக்காததற்கு காரணம், மக்கள் அதைப் பார்த்து கெட்டுப் போவார்கள் என்பதால்தான். அவரே அரசியலுக்கு வந்த பின்னர், மதுபானக் கடைகளைக் திறக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது மிகவும் வருத்தப்பட்டார்.
தர்மசங்கடமான சூழ்நிலை: அப்போது அவர், ' எனக்கு இதுபோன்ற தர்மசங்கடமான சூழ்நிலை வந்தது இல்லை. நான் படங்களில் மது அருந்த கூடாது என்று கூறினேன். ஆனால் அரசியலில் அப்படி இல்லை, இங்கு ஆட்சியை நடத்த போதிய அளவுக்கு பணம் இல்லை என்று கூறுகிறார்கள். இது மட்டும் இல்லாமல் ஏற்கனவே இங்கு மதுப் பழக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்கனவே கொண்டுவந்துவிட்டார்கள்' என்று சொன்னார்.

நலத்திட்டங்கள்: மதுபானம் விற்று வந்த பணத்தைக் கொண்டு ஏழைக் குழந்தைகளுக்கு சத்துணவு போட்டார். அதேபோல், அந்த பாவத்தைப் போக்க பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். விஜய் தனது படங்களில் வெளிநாட்டு மதுபானங்களை எல்லாம் காட்டுகிறார். ஆனால் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாடுகிறார். அவரது சொல்லும் செயலும் வேறு வேறாக உள்ளது. இன்றைக்கு ஆட்சியில் உள்ள திமுகவை அவரால் வெல்ல முடியும் என்பதே பொய்" என்று பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











