டேய் நான் என்ன வெறும் கமல்ஹாசனா?.. ஓபனாக கேட்ட கமல்.. நெத்தியடி பதில் சொன்ன ராதாரவி
சென்னை: கமல்ஹாசன் அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக இந்தக் கூட்டணி அமைந்திருப்பதால் படத்துக்கு உச்சக்கட்ட ஆவல் ரசிகர்களிடயே எழுந்திருக்கிறது. இந்நிலையில் அவர் குறித்து ராதாரவி அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ஷேர் ஆக ஆரம்பித்திருக்கிறது.
அரசியல் பிரவேசம் செய்த கமலுக்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. இருந்தாலும் அரசியலில் தொடர்ந்து பயணிக்கும் அவர் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படம்தான் லோகேஷின் கரியரையும் உச்சத்துக்கு கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வரிசையாக தோல்விகள்: விக்ரம் வெற்றி கொடுத்த தெம்பு இந்தியன் 2வை தொடங்க வைத்தது. ரொம்பவே நம்பி நடித்தார் கமல். ஆனால் படம் படு தோல்வி. கிரிஞ்ச் குடோனாக அமைந்துவிட்டது என்று ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். இதன் முதல் பாகம் கல்ட் க்ளாசிக்காக இன்றும் கொண்டாடப்படும் நிலையில்; தேவையில்லாமல் இரண்டாவது பாகத்தை எடுத்து சூடுபட்டுக்கொண்டார்கள் ஷங்கரும், கமலும். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடித்த தக் லைஃப் படத்துக்கும் அதே ரிசல்ட்தான் கிடைத்தது.

என்ன பிரச்னை?: இரண்டு படங்களின் பிரச்னைகளே அதன் இயக்குநர்கள்தான் என்பது பெரும்பாலானோரின் கருத்து. இளம் இயக்குநர்களும், மற்ற மொழி சீனியர் இயக்குநர்களும் புது புது ஜானர்களை ட்ரை செய்துகொண்டிருக்க; ஷங்கரும், மணியும் அரைத்த மாவையே அரைத்ததுதான் பிரச்னைக்கு காரணம். இந்நிலையில் அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தி கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார்.
அதுவாவது தப்பிக்குமா?: அன்பறிவ் தென்னிந்திய சினிமாக்களில் ஃபேமஸான சண்டை பயிற்சியாளர்கள். தேசிய விருதுகளும் வென்றிருக்கிறார்கள். அவர்கள் முதன்முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். எனவே இப்படமாவது வெல்லுமா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசன் பற்றி ராதாரவி பேசியிருக்கும் விஷயம் ஒன்று ட்ரெண்டாக ஆரமித்திருக்கிறது.
என்ன பேசினார்?: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நடிகர் சங்கம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில் மேடையில் அமர்ந்திருந்த அனைவரையும் அவர்கள் வகித்த பதவியை முன்னாடி சொல்லி பிறகு பெயரை சொன்னார். என்னை மட்டும் ராதாரவி என்று சொன்னார். அவரைத் தொடர்ந்து நான் மைக்கை பிடித்தேன். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களே என சொல்லிவிட்டு, 'கமல்ஹாசன்' அவர்களே என்று சொன்னேன்.
நான் வெறும் கமல்ஹாசனா?: நானும் கமலும் நெருக்கமானவர்கள். கெட்ட வார்த்தையில்கூட பேசிக்கொள்வோம். நிகழ்ச்சி முடிந்ததும் என் கையை பிடித்து, 'டேய் நான் என்ன வெறும் கமல்ஹாசனா? எல்லோரையும் பட்டம் சொல்லி கூப்பிட்டு என்னை சும்மா கூப்பிடுற' என்று சொன்னார். உடனே நான், 'என்னையும் நீ அப்படித்தானே சொன்ன' என்று கூற; அது நட்பானது டா என்று பதிலளித்தார். அதற்கு நான், இதுவும் அப்படித்தான் என சொல்லிவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











