வந்த சண்டைய விடுவதில்லை.. இளைஞர்களை ரோட்டில் விரட்டி விரட்டி அடித்த வரலட்சுமி.. அதிர்ந்த மக்கள்

சென்னை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ்வை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து சினிமாக்களில் நடித்துவருகிறார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் குறித்து தெரியவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் வரலட்சுமி. பாய்ஸ் படத்திலேயே அறிமுகமாகியிருக்க வேண்டிய அவர்; சரத்தின் பெர்மிஷன் கிடைக்காததால் நீண்ட வருடங்கள் கழித்து போடா போடி படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் துப்பாக்கி படத்துக்கு போட்டியாக களமிறங்கியது. இதன் காரணமாக பெரிதாக போகவில்லை. அதேசமயம் வரலட்சுமியின் நடிப்பு, நடனம் ஆகியவற்றுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.

பிஸியான நடிகை: முதல் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தாரை தப்பட்டை விக்ரம் வேதா, மாரி 2, சண்டக்கோழி 2, சர்கார் என வரிசையாக நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் கால் பதித்து தனது திறமையை நிரூபித்ததால்; கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். அதீத திறமை வாய்ந்த அவருக்கு இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

Sarathkumar Shares Shocking Throwback Incident about Actress Varalakshmi
Photo Credit:

திருமணம் செய்துகொண்ட வரலட்சுமி: அவர் முதலில் நடிகர் விஷாலை காதலித்ததாகவும், ஆனால் விஷாலுக்கும் சரத்குமாருக்கும் நடிகர் சங்க பிரச்னை வந்ததால் அந்தக் காதலை பிரேக் அப் செய்துவிட்டார் என்றும் ஒரு தகவல் உண்டு. சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விரட்டி விரட்டி வெளுத்த வரலட்சுமி: திருமணத்துக்கு பிறகும் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்துவருகிறார். அவருக்கு கணவரும் முழு சப்போர்ட்டாக இருக்கிறார். இந்தச் சூழலில் அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை பார்க்கலாம். அதாவது ஒருமுறை நடிகர் சரத்குமாருக்கு பெசன்ட் நகர் காவல் நிலையத்திலிருந்து ஃபோன் வந்திருக்கிறது. ஃபோன் செய்தவர்கள் வரலட்சுமி ஒரு பிரச்னையில் சிக்கியிருக்கிறார். உடனே வந்து அழைத்து செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பதறிய சரத்குமார்: உடனே பதறிய சரத்குமார் அவசரத்துக்கு தனது நண்பர்களை அனுப்பி என்ன ஏதென்று பார்க்க சொல்லியிருக்கிறார். அவர்களும் அங்கு சென்று பார்த்துவிட்டு சரத்துக்கு ஃபோன் செய்து, 'ஒன்றும் இல்லை. வரலட்சுமி ஃப்ரெண்ட்ஸோடு போய்க்கொண்டிருக்கும்போது சில பசங்க இடித்திருக்கிறார்கள். உடனே கடுப்பான வரலட்சுமி எட்டி உதைத்து அவர்களை ரத்த களறி ஆக்கிவிட்டார். இப்படியா போட்டு அடிப்பது என மக்கள் எல்லாம் கூறுகிறார்கள் என்று சொன்னார்களாம். அதேபோல் மால் ஒன்றுக்கு போகும்போது அவரது பாக்கெட்டிலிருந்து செல்ஃபோனை எடுத்த ஒருவரை விரட்டி விரட்டி வெளுத்துவிட்டாராம். இதனை சரத்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X