உதயநிதி.. பவுர்ஃபுல்லான பெயர்.. என்னோட படத்துக்கே இந்த பெயர் வைக்கலாம்னு இருந்தேன்.. விஜய் த்ரோபேக்!

சென்னை: நடிகர் விஜய் தான் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே விஜய் தான் பேசுபொருளாகவே உள்ளார். அவரது கட்சி மாநாடு சில சில தினங்களுக்கு முன்னர், நடைபெற்றிருந்தாலும், கடந்த 14ஆம் தேதி ரஜினிகாந்த்தின் கூலி படம் வெளியானதில் இருந்தே விஜய் குறித்த பேச்சுக்கள் திரைத்துறையிலும், மாநாடு தொடர்பாக அரசியல் துறையிலும் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் இணையத்தில் நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்தும், அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள் குறித்தும் பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதாவது அந்த வீடியோ கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படமான கனிமொழி படத்தின் புரோமோசன் விழா என்பது தெரிகிறது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் பேசியிருப்பதாவது, " சிவா இந்த படத்திற்கு கனிமொழி என்ற டைட்டில் வைத்துள்ளார். ஆனால் கலைஞர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே தனது மகளுக்கு கனிமொழி என பெயர் வைத்துள்ளார். இந்த பெயர் மட்டுமல்ல. அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பல பெயர்கள், உதயநிதி, தயாநிதி, அருள்நிதி, தமிழரசு, கனிமொழி இது போன்ற பெயர்களைக் கேட்கும்போதே, படத்திற்கு டைட்டிலாக இந்த பெயர்களை வைக்க வேண்டும் என்று தோன்றும்.

Vijay Throwback Speech Video He Praise Deputy CM Udhayanidhi Stalin Name
Photo Credit:

பவர்ஃபுல்லான பெயர்கள்: அந்த அளவுக்கு மிகவும் பவர்ஃபுல்லான பெயர்கள். அதேபோல மிகவும் அழகான பெயர் கனிமொழி. டாக்டர் என்ற முறையில் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் எதைஎதை எப்போது செய்ய வேண்டுமோ, அதை சரியான நேரத்தில் செய்து கொண்டு உள்ளார் கலைஞர் ஐயா. எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காரில் வேலூர் நோக்கி ஒரு குடும்பம் போய்க்கொண்டு இருந்தது. மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்று கொண்டு இருந்தார்கள்.

108: அப்போது விபத்து ஏற்படவே, கார் டிரைவரும் காரில் சென்ற ஆணும் அடிபட்டு மயக்கம் அடைந்துள்ளார்கள். அப்போது அந்த ஆணின் மனைவி என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுது கொண்டு, கடவுளே எனது கணவனைக் காப்பாற்று நான் 108 தேங்காய் உடைக்கிறேன், 108 பால் குடம் எடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அழுது கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு இருந்த பெரியவர் ஒருவர், அந்த பெண்ணிடம் சென்று, நீ 108 தேங்காய் உடைக்க வேண்டாம், 108 பால்குடம் எடுக்க வேண்டாம், செல்போன் உள்ளதா எனக் கேட்டுள்ளார். மயக்க நிலையில் இருந்த கணவரிடம் இருந்த செல்போனை எடுத்து 108க்கு போன் செய்துள்ளார். 108க்கு போன் செய்ததும், 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வர, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அவர்கள் சிகிச்சை பெற்று, தற்போது நலமாக உள்ளார்கள்.

Vijay Throwback Speech Video He Praise Deputy CM Udhayanidhi Stalin Name
Photo Credit:

பலரது கவனம்: 88 வயதில் 108 திட்டத்தைக் கொண்டு வந்த உங்களை வாழ்நாளில் மறக்க முடியாது. நீங்கள் 108 வயது வரை வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்தியாவிலேயே பரம்பரை பரம்பரையாக பெயர் சொல்லக்கூடிய குடும்பம் என்றால் அது நேரு அவர்களின் குடும்பத்திற்குப் பின்னர் உங்கள் குடும்பம்தான்" என்று பேசியுள்ளார். இந்த பழைய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தற்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கி திமுகவை மிகவும் மோசமாக விமர்சித்து வருவதால், இந்த வீடியோ குறித்த பேச்சுக்களும் அதிகம் உலா வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X