கோலா: ஃபேஸ்புக், ட்விட்டரில் 'விஜய்'யை வறுத்தெடுக்கும் மக்கள்

By Siva

சென்னை: கோக் விளம்பரத்தில் நடித்துவிட்டு கத்தி படத்தில் மட்டும் அந்நிறுவனத்தை எதிர்த்து போராடும் விஜய்யை மக்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

கத்தி படத்தில் விஜய் கொக்க கோலா நிறுவனம் தனது கிராமத்தில் உள்ள நிலத்தடி நீரை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராடுகிறார். இந்நிலையில் விஜய் கையில் கொக்க கோலா பாட்டில் வைத்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

அந்த போட்டோவில் விஜய் கொக்க கோலா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தது, பெரும் தொகை பெற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. அந்த போட்டோவில் உள்ள விவரங்கள் இதோ...

2000

2000

விஜய் கொக்க கோலா நிறுவனத்துடன் கடந்த 2000ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தார். அவரது ஒப்பந்த காலம் 2000-2003 ஆகும்.

பத்ரி

பத்ரி

விஜய் நடித்த பத்ரி படத்தில் விளம்பர நிகச்சிகளுக்கு கொக்க கோலாவுடன் கைகோர்த்தனர்.

பகவதி

பகவதி

பகவதி படத்தில் விஜய் பாடிய கொக்க கோலா பாடல் பிரபலமாகி அந்நிறுவனத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.

கில்லி

கில்லி

கில்லி படத்தில் வரும் ஒரு காட்சியில் விஜய் கொக்க கோலா பாட்டிலை பிடித்து அதில் இருக்கும் குளிர்பானத்தை குடித்து விளம்பரம் கொடுத்தார்.

2008

2008

2008ம் ஆண்டில் கொக்க கோலா நிறுவனம் மீண்டும் விஜய்யை அணுகி ஒப்பந்தம் செய்தது. அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பதில் பெருமை அடைவதாக விஜய் தெரிவித்தார்.

படங்கள்

படங்கள்

தங்கள் பிராண்டுக்கு விளம்பரம் தேட கொக்க கோலா விஜய்யின் பல படங்களுக்கு ஸ்பான்சர் செய்தது.

விளம்பரங்கள்

விளம்பரங்கள்

விஜய் கொக்க கோலா விளம்பரத்தில் பல முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X