கே.ஆர்.கே.வை தலைகீழாக தொங்கவிட்டு 4 சாத்து சாத்தணும்: லிங்கா நாயகி சோனாக்ஷி
மும்பை: பாலிவுட் நடிகைகளுக்கு ஏன் பெரிய பின்னழகு இல்லை என்று கேட்ட நடிகர் கே.ஆர்.கே.வை தலைகீழாக தொங்கவிட்டு நான்கு அறை அறைய வேண்டும் என நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகைகளுக்கு ஏன் அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் போன்று பெரிய பின்னழகு இல்லை என்பது தனக்கு புரியவில்லை என நடிகர் கமால் ஆர் கான் என்னும் கே.ஆர்.கே. ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு கோபம் வந்துவிட்டது.
அவர் கே.ஆர்.கே. பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அறை
கமால் ஆர் கான் பெண்களை அவமதித்துள்ளார், அவரை தலை கீழாக தொங்கவிட்டு நான்கு அறை அறைவது சரி என்று நினைப்பவர்கள் என் ட்வீட்டை ரீட்வீட் செய்யுங்கள் என்று சோனாக்ஷி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சோனாக்ஷி
டியர் சோனாக்ஷிஜி இதை அவமதிப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால் சாரி. இது பாலிவுட்டில் யார் கவர்ச்சியான நடிகை என்பதை தேர்வு செய்ய ஒரு கணக்கெடுப்பு என்று கே.ஆர்.கே. ட்வீட் செய்துள்ளார்.
போட்டி
இந்த கணக்கெடுப்பை பெண்களை அவமதிப்பதாக நீங்கள் நினைத்தால் நீங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறீர்கள். உங்கள் மனதை புண்படுத்தியதற்கு மன்னிக்கவும் என்று கே.ஆர்.கே. தெரிவித்துள்ளார்.

தீபிகா
பாலிவுட்டில் தீபிகா படுகோனே, பரினீத்தி சோப்ரா, கத்ரீனா கைப் ஆகியோருக்கு பெரிய பின்னழகு இருப்பதாக நீங்கள் நினைத்தால் என் ட்வீட்டை ரீட்வீட் செய்யவும் என்று கே.ஆர்.கே. தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டை இன்னும் அந்த 3 பேரும் பார்க்கவில்லை போன்று.


Click it and Unblock the Notifications











