5 பைசாவுக்கு சோளக்கதிர் வாங்கி பசி தீர்த்த ரஜினி!- தெலுங்கு தயாரிப்பாளர் சொல்லும் ப்ளாஷ்பேக்

By Shankar

ஆரம்ப நாட்களில், படப்பிடிப்பில் ரஜினிக்கு பசித்தால் கூட யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவரே 5 பைசாவுக்கு மக்காச்சோளம் வாங்கி சாப்பிட்டுக் கொள்வார். அந்த அளவு துயரமான நாட்களைக் கடந்து வந்தவர் ரஜினி என தெலுங்குத் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

சமீபத்தில் பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் ஹரிராம ஜோகையா, ரஜினியின் ஆரம்ப கால நிலை, அவர் பட்ட சிரமங்கள் குறித்து நினைவு கூர்ந்தார்.

சிலக்கம்மா செப்பின்டி

சிலக்கம்மா செப்பின்டி

அவர் கூறுகையில், "அது 1977-ம் ஆண்டு. ரஜினி நடிக்க வந்து ஓரளவு புகழ் பெற்றிருந்த நேரம். தெலுங்கில் சிலக்கம்மா செப்பன்டி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இதுதான் அவர் முதன் முதலில் நாயகன் வேடத்தில் நடித்த படம். இந்த படம்தான் பிறகு தமிழில் கமல் நடிக்க நிழல் நிஜமாகிறது என்ற பெயரில் ரீமேக் ஆனது.

கோதாவரிக் கரையில்

கோதாவரிக் கரையில்

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படப்படிப்பில் யாரும் அவரை கண்டுக் கொள்ளவே மாட்டார்கள்.

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

சிலக்கம்மா செப்பன்டி படப்பிடிப்பில் ரஜினியை நீண்ட நேரம் அவரை காக்க வைத்தனர். இத்தனைக்கும் அவர்தான் படத்தின் ஹீரோ. மற்ற நடிகர், நடிகைகள் காட்சிகளைத்தான்தான் முதலில் படமாக்கினர். கடைசியாக படப்பிடிப்பு முடியும் போது தான் ரஜினியை அழைத்து அவர் காட்சியை எடுத்தனர்.

பொறுமை காத்தார்

பொறுமை காத்தார்

ஆனாலும் ரஜினி பொறுமை காத்தார். படப்பிடிப்பை விட்டு நகராமல் மற்றவர்கள் நடிப்பதை பார்த்துக் கொண்டே இருந்தார்.

5 பைசாவுக்கு சோளக் கதிர்

5 பைசாவுக்கு சோளக் கதிர்

திடீரென அவருக்குப் பசி எடுக்கும். செட்டில் அவருக்கு அந்த நேரத்துக்கு யாரும் உணவு தர மாட்டார்கள். அவரும் அதை எதிர்ப்பார்க்க மாட்டார். உடனே எழுந்து போய் கோதாவரி ஆற்றங்கரை ஓரத்தில் சுட்டு விற்பனைக்காக வைத்து இருக்கும் மக்கா சோளத்தை 5 பைசா கொடுத்து வாங்கிச் சாப்பிடுவார்.

நினைக்கவே இல்லை

நினைக்கவே இல்லை

பல நாட்களில் அதுதான் அவரது உணவாக இருந்தது. அப்போது ரஜினியை பார்த்தவர்கள், நான் உள்பட, அவர் எதிர்காலத்தில் நிச்சயம் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று நினைத்திருக்கவே இல்லை.

அதனால்தான் சூப்பர் ஸ்டார்

அதனால்தான் சூப்பர் ஸ்டார்

ஆனால் அந்த கஷ்டங்களையெல்லாம் தனது முன்னேற்றத்துக்கான படிகளாக மாற்றினார். இப்போதும் அந்த நாட்களை அவர் மறக்கவும் இல்லை. வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவும் இல்லை. அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்!", என்றார்.

எம்பி

எம்பி

77 வயதாகும் ஹரிராம ஜோகய்யா காங்கிரஸ் சார்பில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிலகம்மா செப்பன்டி படத்தைத் தயாரித்தவரும் இவர்தான்!

More from Filmibeat

Read more about: rajinikanth ரஜினி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X