»   »  தமிழரின் வீர அடையாளம் மீட்கப்பட்டிருக்கிறது! - கவிஞர் வைரமுத்து

தமிழரின் வீர அடையாளம் மீட்கப்பட்டிருக்கிறது! - கவிஞர் வைரமுத்து

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து வைரமுத்து கூறியிருப்பதாவது:

Vairamuthu praises Union Govt

வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது.

அந்த உரிமைக்காகப் போராடியவர்களுக்கும் மீட்டுத் தந்த பெருமக்களுக்கும் மகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன்.

இது நிரந்தரமான உரிமையாக வேண்டுமென்றால் முறைப்படியான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்களையும் அனுமதி அளித்த பாரதப் பிரதமர் மோடி அவர்களையும் தமிழ் இன உணர்வாளர்கள் பாராட்டுகிறார்கள்.

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Poet Vairamuthu has praised union govt for allowing Tamils to celebrate Jallikkattu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos