பாரதிராஜா ஸ்டைல் முதல்மரியாதை!

By Mayura Akilan

ரவிக்கைப் போடாத கிராமத்து பெண்கள்... பச்சை பசேல் அழகு... ஆறு... முதியவர்களின் கூட்டம் என பாரதிராஜவிற்கே உரிய கிராமத்து சீரியல் முதல்மரியாதை கலைஞர் தொலைக்காட்சியில் முதல்மரியாதை தொடர் தொடங்கியுள்ளது.

பளபளக்கும் நகைகள்... பட்டுப்புடவைகள்... நகரத்து பணக்கார வாழ்க்கை என சீரியல் எடுப்பது ஒரு ரகம். நடுத்தர குடும்ப வாழ்க்கையில் நடைபெறும் பிரச்சினைகளை மையப்படுத்தி சீரியல் எடுப்பது மற்றொரு ரகம்.

இயக்குநர் பாரதிராஜா இந்த இரண்டு ரகங்களுக்குள் சிக்காமல் மற்றொரு கிராமத்து சீரியலை இயக்கியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 3ம் தேதி முதல் புதிய தொடரான முதல்மரியாதை தொடங்கியுள்ளது.

ரவிக்கை போடாத பெண்கள்

ரவிக்கை போடாத பெண்கள்

பாரதிராஜா படங்களில் கதாநாயகி என்றாலே ரவிக்கை போடாமல்தான் இருக்கவேண்டும் என்ற நியதியை இந்த தொடரிலும் புகுத்தியுள்ளார். பானை செய்யும் வீட்டுப் பெண்ணாக அறிமுகமாகிறார் கதாநாயகி.

கரகாட்டக்காரிக்கு ரசிகர் மன்றம்

கரகாட்டக்காரிக்கு ரசிகர் மன்றம்

டிவி, இணையம், என்று வந்த பின்னர் கிராமத்து திருவிழாக்களில் கரகாட்டத்தை மறந்து விட்டனர். ஆனால் இன்றைக்கும் கரகாட்டக்காரிக்கு ரசிகர்மன்றம் வைக்க நினைக்கின்றனர் பாரதிராஜா கிராமத்து இளைஞர்கள்.

அண்ணேன்னு சொல்லதே

அண்ணேன்னு சொல்லதே

கிராமத்து கரகாட்டக்காரன் மீது கரகாட்டக்காரிக்கு காதல். நாதஸ்வர வித்வான் கண் வைக்க அவரை அண்ணன் என்று கூறி அழவைக்கிறாள் கரகாட்டக் காரி. கரகாட்டக் காரியின் பாதம் பட்ட தண்ணீரை தீர்த்தமாக குடிக்கின்றனர் கிராமத்து இளைஞர்கள்.

ரசிக்க வைக்கும் பாடல்

ரசிக்க வைக்கும் பாடல்

டைட்டில் பாடல் ரசிக்கத் தூண்டும் விதமாக உள்ளது என்றாலும் இந்த அனைவருமே புதுமுகமாக உள்ளனர். முதல் மரியாதை என்று கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தியது போல டைட்டில் போடுகின்றனர். பிறந்தநாள் ஸ்பெசலாக கொடுத்துள்ளார் பாரதிராஜா. முதல்மரியாதை செய்யுமா?

பாரதிராஜா இயக்கிய முதல்மரியாதை படம் சிவாஜிக்கானது. நடுத்தர வயது ஆணுக்கும், இளம்பெண்ணுக்கும் ஏற்படும் காதல் மையப்படுத்தப்பட்டிருக்கும். கலப்புத் திருமணத்திற்கு ஆதரவாக பேசியிருப்பார் பாரதிராஜா. இதில் எந்த காதலை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை. இனிவரும் எபிசோடுகளைப் பொறுத்துதான் ரசிகர்கள் இந்த தொடருக்கு கொடுக்கும் வரவேற்பு தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X