»   »  குலேபகாவலி... நம்பி போகலாமா? #GulebaghavaliReview

குலேபகாவலி... நம்பி போகலாமா? #GulebaghavaliReview

Posted By:
Subscribe to Oneindia Tamil
குலேபகாவலி பட விமர்சனம்..!! #Gulebhagavali

ஹீரோவாக தேவி படம் மூலம் ரீ எண்ட்ரி ஆன பிரபுதேவாவின் அடுத்த படம். டிசைன்களில் விலங்குகள், காமிக் படங்களை போட்டு குழந்தைகளுக்கான படமாக பில்டப் கொடுக்கப்பட்ட படம். அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்துகிறதா என்று பார்ப்போம்.

சிலைகளை கடத்தி விற்கும் மன்சூர் அலிகான் கும்பலில் 'மூளை சாமானை' உபயோகிக்கும் புத்திசாலியாக பிரபுதேவா, பார் டான்சராக இருந்துகொண்டே வசதியானவர்களை செக்ஸ் ஆசை காட்டி ஏமாற்றி பணம் பறிக்கும் ஹன்சிகா, நூதனமான முறைகளில் கார் திருட்டில் ஈடுபடும் ரேவதி இவர்களுக்கு மதுசூதனன், ஆனந்த்ராஜ் அண்ட் கோவால் ஒரு அசைன்மெண்ட் தரப்படுகிறது. அந்த அசைன்மெண்டில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை ஆங்காங்கே சிரிக்கவும் சில இடங்களில் நெளியவும் வைத்து சொல்வதுதான் குலேபகாவலி.

Gulebaghavali first review

மூளைக்காரனாக பிரபுதேவா. மனிதர் என்னம்மா துள்ளுகிறார். உங்களுக்கு வயசே ஆகாதா மாஸ்டர்? டான்சில் பின்னுகிறார். இன்னும்கூட நிறைய காமெடி காட்சிகளை அவருக்கு வைத்திருக்கலாம்.

பார் டான்சராக ஹன்சிகா கவர்ச்சி காட்ட பயன்பட்டிருக்கிறார்.

யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், முனீஸ்காந்த், சத்யன், மொட்டை ராஜேந்திரன் என்று காமெடிக்கு ட்ரெண்டில் இருக்கிற அத்தனை ஆட்களும் இருக்கிறார்கள்.

டைமிங் டயலாக்குகளில் ஆளாளுக்கு சிக்சர் அடிக்கிறார்கள். அவற்றில் ஆனந்த்ராஜும் யோகிபாபுவும் அதிகமாக ஸ்கோர் செய்கிறார்கள்.

படத்தின் இன்னொரு ஹைலைட் பாடல்கள் காட்சியமைக்கப்பட்ட விதம். பிரபுதேவாவின் நடனத்தில் கோட்டை விட்டவர்கள் மீண்டும் ஒரு முறை பார்த்து பரவசப்பட்டுக்கொள்ளவும்.

படத்தின் ஒரே குறை ரேவதி. கலகலப்பாக பண்ண வேண்டிய கேரக்டருக்கு ரேவதியை போட்ட புண்ணியவான் யாருப்பா?

Gulebaghavali first review

காமெடி படங்கள் குறைந்த நிலையில் பெரிய பட்ஜெட்டில் பெரிய நடிகர்களை வைத்து லாஜிக் இல்லாத காமெடி படத்தைத் தந்திருக்கிறார் கல்யாண். முழுக்கவே காமெடியாக்காமல் ஆங்காங்கே சிரிக்க வைப்பதுதான் சிரிச்சா போச்சு ரவுண்ட்களை யூட்யூபில் ஓட்டி ஓட்டி பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. பாடல்கள், ஒளிப்பதிவு என டெக்னிக்கலாகவும் குறை இல்லை. ஒரு பாடலுக்கு அவதார் செட்டெல்லாம் கிராபிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள்.

அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் போனால் வாய்விட்டு சிரித்து வரலாம்.

-ஆர்ஜி

English summary
Prabhu Deva starrer Pongal release Gulebaghavali review.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X