twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோசமான படங்களுக்கு ' ப்ரீஆஸ்கர்' விருது!

    By Shankar
    |

    Sex and the City
    சிறந்த படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்குவதைப் போல, மோசமான படங்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன, இங்கல்ல... அமெரிக்காவில்.

    Annual Golden Raspberry Awards எனப்படும் இந்த விருதுகளுக்கு 'ப்ரீ ஆஸ்கர்' விருதுகள் என்றும் பெயர் உண்டு. வசூலில் பெரும் சாதனைப் படைத்த படங்களும் இந்த மோசமான விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    சிறந்த படங்களுக்கு ஆஸ்கர் வழங்கப்பட்ட நாளுக்கு முதல் நாள் மிக மோசமான படங்களுக்கு இந்த விருதை வழங்கும் விழாவும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.

    'ஏர்பென்டர்', 'செக்ஸ் அண்ட் த சிட்டி 2' ஆகிய படங்கள் இந்த விருதினைப் பெற்றன. செக்ஸ் அண்டு தி சிட்டி -2 என்ற படம் ரூ.1,275 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இருந்தும் அது தரமான படம் அல்ல என்று கருதி அதை கேலி செய்யும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    மோசமான நடிகர் விருது ஆஸ்தான் குட்சருக்கு கிடைத்தது. கில்லர்ஸ், மற்றும் வேலன்டைன்ஸ் டே ஆகிய படங்களில் நடித்தவர் இவர். மோசமான நடிகைக்கான விருது சாரா ஜெசிக்கா பார்கர், கிறிஸ்டின் டேவிஸ், கிம் கேட்ரால், சிந்தியா நிசான் ஆகியோருக்குக் கிடைத்தது.

    மோசமான துணை நடிகைக்கான விருது ஜெசிக்கா ஆல்பாவுக்கு வழங்கப்பட்டது. தி கில்லர் இன்சைடு டீ, லிட்டில் பாக்சர்ஸ், மாசட் அண்டு வேலன்டைன்ஸ் டே ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகை இவர்!

    நம்ம ஊரிலும் இப்படியொரு விருது கொடுத்தா...?!

    English summary
    Martial arts fantasy flick 'The Last Airbender' swept the board at the pre-Oscar Razzie awards for worst movies of 2010 Saturday, while 'Sex and the City 2' also won one of the dubious honors.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X