'சிவாஜி'க்கு விருது- குஷியில் சின்மயி!

சிவாஜி படத்தில் இடம் பெற்ற சஹானா தூரல் தூவுதோ என்ற பாடலைப் பாடியவர் சின்மயி. சூப்பர் ஹிட் பாடலான இந்தப் பாட்டுக்காக, அவருக்கு தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது கிடைத்துள்ளது.
இந்த விருது குறித்து சின்மயி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விருது பெற்றுத் தந்தப் பாடலை எனக்காகக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றியதால் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.
ரஹ்மான் சாருடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே ஒரு புனிதமான அனுபவம் என்றார் சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டால் படம்தான் சின்மயி திரைப்படங்களில் பாடிய முதல் படமாகும். 2002ல் வெளியான அந்தப் படத்தில் பாடி அறிமுகமான சின்மயி பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.
24 வயதாகும் சின்மயி, முதன் முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தபோது பிளஸ்டூ படித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல் மட்டுமல்லாமல் டப்பிங், டிவி ஷோக்களை நடத்துவது, சொந்த நிறுவனத்தை நிர்வகிப்பது, சாரங்கி கலையில் நிபுணத்துவும் என பன்முகம் கொண்டவர் சின்மயி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











