»   »  மீரா ஜாஸ்மினுக்கு விருது!

மீரா ஜாஸ்மினுக்கு விருது!

Subscribe to Oneindia Tamil
Meerajasmine
மீரா ஜாஸ்மினுக்கு மலையாள மனோரமா குழுமத்தின் வனிதா, சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது. மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது.

மலையாள மனோரமா குழுமத்திலிருந்து வெளியாகும் வனிதா, மலையாள மனோரமா, மனோரமாஆன்லைன்.காம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட வாசகர்கள் கருத்துக் கணிப்பின் மூலம் சிறந்த நடிகர், நடிகையர் உள்ளிட்டோருக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி சிறந்த நடிகராக மம்முட்டியும், நடிகையாக மீரா ஜாஸ்மினும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மோகன்லால் சிறந்த பாப்புலர் நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சீனிவாசனின் கத பறயும் போள் படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநராக சத்யன் அந்திக்காடு தேர்வாகியுள்ளார்.

சிறந்த வில்லனாக கலாபவன் மணி, சிறந்த திரைக்கதாசிரியராக சீனிவாசனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வருகிற 23ம் தேதி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. தலைமை தாங்க வருமாறு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...