twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ரோபோ'வுக்கு இரண்டு விருதுகள்!

    By Chakra
    |

    ஸ்டார் ஸ்கிரீன் 17 வது விருது விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்தின் இந்திப் பதிப்பான ரோபோவுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

    இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் (வட இந்தியப் பதிப்புகள்) ஸ்கிரீன் பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாலிவுட் படங்களுக்குத் தனியாகவும், தென் இந்திய மொழிப் படங்களுக்கு தனியாகவும் இந்த விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஸ்கிரீன் விருதுகள் வழங்கும் விழா மும்பை அந்தேரியில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. பொதுவாக டப்பிங் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதில்லை. ஆனால் ரஜினியின் ரோபோ மட்டும் விதிவிலக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்தப் படத்துக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்காக ஒரு விருதும், படத்தின் நவீன தொழில்நுட்ப உத்திக்காக நடுவர்களின் சிறப்பு விருதும் வழங்கப்பட்டன.

    இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை தபாங் படத்துக்காக சல்மான்கான் பெற்றார். சிறந்த நடிகை விருது வித்யா பாலனுக்கு வழங்கப்பட்டது.

    ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான் படத்துக்கு ராம்நாத் கோயங்கா நினைவு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

    English summary
    Super star Rajini's Enthiran became one of the most remembered movies in Indian cinema history for many reason. Now the movie has received its first award in the 17th Annual Star Screen Awards. Enthiran got two awards, one for its mind blowing special effects and another one is special award for presenting cutting age technology in movies, which is far ahead of its time in Indian cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X