»   »  13 வது சர்வதேசத் திரைப்பட விழா.. சிறந்த நடிகர் அரவிந்த் சாமி.. நடிகை நயன்தாரா!

13 வது சர்வதேசத் திரைப்பட விழா.. சிறந்த நடிகர் அரவிந்த் சாமி.. நடிகை நயன்தாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றுடன் முடிந்த சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதுகளைப் பெற்றுள்ளனர்.

சென்னை 13 வது சர்வதேசத் திரைப்பட விழா ஜனவரி 6 ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவுற்றது. இதில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 184 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இந்த விழாவில் தமிழ்த் திரைப்படங்களான ரேடியோ பெட்டி, கிருமி ஆகியவை சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டு விருதுகளைக் கைப்பற்றியிருக்கிறது.

12 தமிழ்ப்படங்கள்

12 தமிழ்ப்படங்கள்

இதில் திரையிடப்படுவதற்கு ஜோதிகாவின் 36 வயதினிலே, மிஷ்கினின் பிசாசு, ஜெயம் ரவியின் தனி ஒருவன், நயன்தாராவின் மாயா, விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய், விக்ராந்தின் தாக்க தாக்க, பாபி சிம்ஹாவின் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, கதிரின் கிருமி,சார்லஸ் ஷபிக் கார்த்திகா, கோடைமழை, ரேடியோ பெட்டி மற்றும் ஓட்டதூதுவன் - 1854 போன்ற 12 படங்களை விழாக்குழுவினர் தேர்வு செய்திருந்தனர்.

சிறந்த படங்கள்

சிறந்த படங்கள்

நேற்றுடன் நிறைவு பெற்ற இந்த விழாவில் அனுசரண் இயக்கிய 'கிருமி' திரைப்படத்துக்கு முதல் பரிசும், ஹரி விஸ்வநாத் இயக்கிய 'ரேடியோ பெட்டி' திரைப்படத்துக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தது. மேலும் 'ரேடியோ பெட்டி'யில் சிறப்பாக நடித்த லட்சுமணன் தாத்தா சிறந்த நடிகருக்கான ஜூரி விருதினைப் பெற்றார்.

சிறந்த நடிகர், நடிகை

சிறந்த நடிகர், நடிகை

இந்த விழாவில் சிறந்த நடிகர், நடிகை விருதை அரவிந்த் சாமி, நயன்தாரா இருவரும் கைப்பற்றினர்.இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்களின் பாலச்சந்தர் நினைவு விருதை தனி ஒருவன் படத்தில் நடித்தற்காக அரவிந்த் சாமியும், மாயா படத்தில் நடித்ததற்காக நயன்தாராவும் பெற்றனர். மேலும் இந்த வருடத்தின் அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருதும் நயனுக்குக் கிடைத்தது.

2 படங்கள் 2 விருதுகள்

2 படங்கள் 2 விருதுகள்

இதில் திரையிடப்படுவதற்கு நயன்தாரா நடிப்பில் வெளியான தனி ஒருவன், மாயா ஆகிய 2 படங்கள் தேர்வாகி இருந்தன. இதில் தனி ஒருவன் நயனைக் கைவிட்டாலும் மாயா காப்பாற்றி அவருக்கு விருதுகளை வழங்கச் செய்து விட்டது. இந்த விழாவில் சிறந்த நாயகி மற்றும் அமிதாப் பச்சன் யூத் ஐகான் என்று 2 விருதுகளை நயன்தாரா வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
13th Chennai International Film Festival Awards:Nayanthara & Aravind Swamy Both are Bagged Best Actor, Actress Award. Debut Director Anucharan's Kirumi won Best Film Award.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil