twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    6 பிரிட்டிஷ் பாப்டா விருதுகளை வென்ற தி கிங்ஸ் ஸ்பீச்!

    By Shankar
    |

    The Kings Speech Movie
    தொடர்ந்து பாராட்டுக்களைக் குவித்து வரும் தி கிங்ஸ் ஸ்பீச் ஆங்கிலப் படத்துக்கு 6 பாப்டா விருதுகள் கிடைத்துள்ளன.

    இங்கிலாந்தில் சிறந்த சினிமா படங்களுக்கு வழங்கப்படும் பாப்டா விருது வழங்கும் விழா லண்டனில் நேற்று நடந்தது. இந்த விழாவை பிரிட்டிஷ் அகடாமி ஆப் பிலிம் மற்றும் டெலிவிஷன் ஆர்ட்ஸ் நிறுவனமும் ஏற்பாடு செய்திருந்தன.

    இதில், தி கிங்ஸ் ஸ்பீச் ஆங்கில படம் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், துணை நடிகை உள்பட 6 விருதுகளை பெற்றது.

    படத்தின் நாயகன் காலின் பிர்த்துக்கு சிறந்த நடிகர் விருது பெற்றார்.இதில் அவர் 6-வது ஜார்ஜ் மன்னன் வேடத்தில் நடித்து இருந்தார். இதே படத்தில் நடித்த ஜியாப்ரி ரஷ்க்கு சிறந்து துணை நடிகர் விருதும், ஹெலனா பான்கம் கார்டருக்கு சிறந்த துணை நடிகை விருதும் கிடைத்தது.

    சிறந்த திரைக்கதை, சிறந்த இசைக்கான விருதும் இந்த படத்துக்கு வழங்கப்பட்டது. இப்படத்தை டாம் ஹுப்பர் டைரக்டு செய்துள்ளார்.

    ஆஸ்கர் விருது விழாவில் இப்படம் 14 விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விழாவில், சிறந்த நடிகைக்கான விருது நடாலி போர்ட்மானுக்கு கிடைத்தது. பிளாக் ஸ்வான என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது.

    சிறந்த இயக்குநருக்கான விருது தி சோஷியல் நெட்வொர்க் படத்தை இயக்கிய டேவிட் பின்ஸருக்குக் கிடைத்தது. இப்படம் சிறந்த எடிட்டிங், சிறந்து கதை வசனத்துக்கான விருதுகளையும் பெற்றது.

    இன்செப்சன் படத்துக்கு சிறந்து விஷுவல் எபெக்ட்ஸ் விருதும், சிறந்த அனிமேஷன் பட விருது டாய் ஸ்டோரி-3 என்ற படத்துக்கும் கிடைத்தன.

    English summary
    The King's Speech received yet more accolades at last night's Baftas ceremony with a best actor award for Colin Firth and supporting actor gongs for Helena Bonham Carter and Geoffrey Rush. The film is a dramatisation of the months running up to and after King George VI's ascension to the throne in 1936 and the effects of his stammer. Lionel Logue, played by Rush, is the Australian who employs unorthodox techniques to help the King (Firth) overcome his fear of public speaking.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X