127 ஹவர்ஸ் படத்துக்காக பாஃப்டா விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை

விமர்சகர்கள் விருதில், ஒரிஜினல் பாடலுக்கான விருது ரஹ்மானுக்குக் கிடைத்தது. ஆனால் கோல்டன் குளோப் விருது கை நழுவிப் போனது. ஆஸ்கர் வாய்ப்பு சற்று பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் பாஃப்டா விருதுக்கு ரஹ்மான் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சிறந்த ஒரிஜினல் இசைப் பிரிவில் ரஹ்மானின் 127 ஹவர்ஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாஃப்டா விருதை ஏற்கனவே ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ரஹ்மான் பெற்றுள்ளார். தற்போது கிடைத்தால் 2வது முறையாக அந்த விருதை அவர் பெறுவார்.
பாஃப்டா விருதுப் போட்டியில் ரஹ்மான் தவிர டேனி எல்ப்மான் (ஆலிஸ் இன் ஒன்டர்லேன்ட்), ஜோன் பாவல் (ஹவ் டு டிரெய்ன் எ டிராகன்), ஹன்ஸ் ஜிம்மர் (இன்சப்ஷன்), அலெக்சான்ட்ரே டெஸ்பிளாட் (தி கிங்ஸ் ஸ்பீச்) ஆகியோரும் உள்ளனர்.
More from Filmibeat
127 ஹவர்ஸ் ar rahman இங்கிலாந்து திரைப்படம் மற்றும் டிவி கலைக்கழகம் பாஃப்டா விருது பாஃப்டா விருதுக்கு ஏஆர்ரஹ்மான் பெயர் பரிந்துரை bafta award british academy of film and television arts award


Click it and Unblock the Notifications











