ஷபானா ஆஸ்மி, மீரா நாயருக்கு பத்ம பூஷன் விருதுகள்

இந்தியாவின் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகள் இந்த ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகை ஷபானா ஆஸ்மி, சினிமா இயங்குனர் மீரா நாயர், இசை கலைஞர்கள் டி.வி. கோபாலகிருஷ்ணன், எம்.எஸ். கோபால கிருஷ்ணன், மற்றும் பிரபல இதய சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி உள்ளிட்ட 27 பேர் பத்ம பூசன் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
பத்ம ஸ்ரீக்கு 77 பேர்
பத்ம ஸ்ரீ விருதுக்கு இதில் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஸபர் இக்பால், பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜூலன் கோஸ்வாமி, வில்வித்தை வீரர் லிம்பா ராம், டாக்டர்கள் வி.எஸ். நடராஜன், வி. மோகன், சமூக ஆர்வலர் பி.கே.கோபால் உள்பட 77 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விருது வழங்கும் விழா மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications











