twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கரில் ஏமாந்த தி மார்ஷியனுக்கு ஆறுதல் தந்த "எம்பையர்".. மாட் டாமனுக்கு சிறந்த நடிகர் விருது

    By Manjula
    |

    லண்டன்: ஆஸ்கரில் விருது கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றத்துக்குள்ளான தி மார்ஷியன் படத்துக்கு லண்டனில் நடந்த எம்பையர் விருதுகள் விழாவில் ஆறுதல் கிடைத்தது. அப்படத்தின் நாயகன் மாட் டாமன், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

    அதேசமயம், மேட் மேக்ஸ் பரி ரோட் படத்தை வீழ்த்தி ஸ்டார் வார்ஸ் திரைப்படம் அதிக விருதுகளை வென்றுள்ளது. கடந்த வருடம் வெளியான ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவெக்கன்ஸ் திரைப்படம் வசூலில் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்திருந்தது.

    லண்டனில் நடைபெற்ற எம்பையர் விருதுகள் விழாவில் ஆஸ்கர் படங்களை பின்னுக்குத்தள்ளி, அதிக விருதுகளை ஸ்டார் வார்ஸ் வென்றுள்ளது.

    ஸ்டார் வார்ஸ்

    ஸ்டார் வார்ஸ்

    ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவெக்கன்ஸ் திரைப்படம் லண்டனில் நடந்த 2016 எம்பையர் விருதுகள் விழாவில், 5 விருதுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சிறந்த கலைவடிவம், சிறந்த இயக்கம், சிறந்த விஷுவல் எப்பெக்ட்ஸ், சிறந்த அறிமுக நடிகர் உள்ளிட்ட 5 பிரிவுகளில் இப்படம் விருதுகளை வென்றுள்ளது.

    மேட் மேக்ஸ்: பரி ரோட்

    மேட் மேக்ஸ்: பரி ரோட்

    ஸ்டார் வார்ஸ்க்கு அடுத்தபடியாக மேட் மேக்ஸ்: பரி ரோட் திரைப்படம் சிறந்த ஒப்பனை, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பாளர் மற்றும் சிறந்த இசைத் தொகுப்பு போன்ற 4 பிரிவுகளில் விருதுகளை வென்றது.

    தி ரெவனன்ட்

    தி ரெவனன்ட்

    லியானர்டோ டிகாப்ரியோ நடிப்பில் வெளியான தி ரெவனன்ட் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டிச்சென்றது. லேட்டஸ்ட் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ஸ்பெக்டர் சிறந்த பிரிட்டிஷ் படத்திற்கான விருதை வென்றது.

    தி மார்ஷியன்

    தி மார்ஷியன்

    'தி மார்ஷியன்' திரைப்படத்தில் நடித்த மாட் டாமன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அதேபோல 'தி டேனிஷ் கேர்ள்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்திய அலிசியா விகாண்டேர் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

    English summary
    Star Wars:The Force Awakens Beats Mad Max Fury Road in 2016 Empire Awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X