twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2016 ஆஸ்கர் விருதுகளில் கலக்கப் போகும் நடிகர்கள் மற்றும் படங்கள் ஒரு பார்வை

    By Manjula
    |

    லாஸ் ஏஞ்செல்ஸ்: உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 88 வது ஆஸ்கர் விருதுகள் இன்றிரவு அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெறவுள்ளது.

    இந்த விழாவில் இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா மற்ற ஹாலிவுட் கலைஞர்களுடன் சேர்ந்து ஆஸ்கர் விருதுகளை வழங்கவிருக்கிறார்.

    இதனால் இந்திய ரசிகர்களும் இந்த விழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றக் காத்திருக்கும் படங்கள் மற்றும் நடிக, நடிகையரில் எதிர்பார்ப்புக்குரியவர்களை பற்றி இங்கே காணலாம்.

    சிறந்த படம்

    சிறந்த படம்

    சிறந்த படம் என்ற பிரிவில் தி பிக் ஷார்ட், பிரிட்ஜ் ஆப் ஸ்பைஸ், ப்ரோக்லின், மேட் மாக்ஸ்: பரி ரோடு, தி மார்ஷியன், தி ரெவனன்ட், ரூம் , மற்றும் ஸ்பாட்லைட் ஆகிய 9 படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் லியார்னடோ டி காப்ரியோ நடிப்பில் வெளியான தி ரெவனன்ட் மற்றும் பிரயி லார்சன் நடிப்பில் வெளியான தி ரூம் ஆகிய படங்ககளுக்கு இடையில் போட்டி கடுமையாக இருக்கலாம்.

    சிறந்த நடிகர்

    சிறந்த நடிகர்

    தி ரெவனன்ட் படத்தில் காட்டுக்குள் சிக்கிக் கொண்டு போராடும் மனிதராக நடித்திருந்த லியார்னடோ டி காப்ரியோவிற்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தப் படத்தில் நடுக்காட்டில் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ முரட்டுக் கரடியால் தாக்கப்பட்டு, குற்றுயிராக கிடந்து தப்பிப்பதுதான் கதை. இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக ஏற்கனவே கோல்டன் குளோப் மற்றும் பாஃப்டா விருதுகளை டி காப்ரியோ கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரிவில் டிகாப்ரியோவிற்கு தி மார்ஷியன் படத்தில் நடித்த மாட் டாமன் கடும் போட்டியைக் கொடுக்கலாம்.

    சிறந்த நடிகை

    சிறந்த நடிகை

    ரூம் படத்தில் நடித்த பிரயி லார்சன் சிறந்த நடிகை விருதை தட்டிச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஒரு கைக்குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு சிறிய அறையில் 5 வருடங்கள் போராடும் இளம் தாயாக நடித்திருந்த பிரயி லார்சன் இப்படத்தில் நடித்திருப்பார். தனது குழந்தையிடம் இந்த சிறிய அறைதான் மொத்த உலகமும் என்று நம்ப வைப்பதிலும், அந்த அறையை விட்டு தப்பிச் செல்லும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரயி லார்சன் இந்த விருதுக்கு தகுதியானவரே என்றாலும் கூட ஜாய் படத்தில் நடித்த ஜெனிபர் லாரன்ஸ் இந்த விருதில் கடும் போட்டியைக் கொடுக்கலாம்.

    சிறந்த இயக்குநர்

    சிறந்த இயக்குநர்

    இந்தப் பிரிவில் அலேஜான்ட்ரியோ ஜி. இனரிட்டு (தி ரெவனன்ட்), ஜார்ஜ் மில்லர்( மாட் மாக்ஸ்: பரி ரோடு), ஆதம் மக்கே( தி பிக் ஷார்ட்) லென்னி ஆபிரகாம் சன்( தி ரூம்) மற்றும் டாம் மக்கார்த்தி( தி ஸ்பாட்லைட்) ஆகிய 5 இயக்குநர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். இதில் ரூம் மற்றும் தி ரெவனன்ட் ஆகிய படங்களின் இயக்குனர்களுக்கிடையில் போட்டி கடுமையாக இருக்கலாம்.

    எத்தனை பிரிவுகள்

    எத்தனை பிரிவுகள்

    இதைத் தவிர சிறந்த துணை நடிகர், நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த தழுவல் கதை, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த காட்சித் தொகுப்பு, சிறந்த குறும்படம், சிறந்த அனிமேஷன், சிறந்த டாக்குமென்டரி, சிறந்த அன்னியப்படம், சிறந்த ஒலி எடிட்டிங், சிறந்த அசல் பாடல், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த அனிமேஷன் திரைப்படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த திரைப்பட எடிட்டிங் ஆகிய பிரிவுகளில் சிறந்தவர்களுக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

    இதில் யார், யார் விருதை வென்று சாதனை படைக்கப் போகிறார்கள் என்பது இன்றிரவு தெரிந்து விடும்.

    English summary
    2016 Oscar: The 88th Annual Academy Awards Nominees List - View.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X