twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2022 பிலிம்பேர் விருதுகள்: சூறையாடிய சூர்யாவின் சூரரைப் போற்று… முழுமையான பட்டியல் இதோ…

    |

    பெங்களூரு: 2022ம் ஆண்டுக்கான 67வது பிலிம்பேர் விருதுகள் பெங்களூருவில் நடைபெற்றது.

    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான சிறந்த படங்கள், அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னதாக நடிகர்கள், நடிகைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு நடைபெற்றது.

    என் படத்தை இப்படி வெளியிட்டிருக்க கூடாது..மானமே போச்சு..இயக்குநர் மீது பாய்ந்த நடிகை மஹிமா நம்பியார்என் படத்தை இப்படி வெளியிட்டிருக்க கூடாது..மானமே போச்சு..இயக்குநர் மீது பாய்ந்த நடிகை மஹிமா நம்பியார்

    சிவப்பு கம்பள வரவேற்பு

    சிவப்பு கம்பள வரவேற்பு

    தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாள திரையுலகின் சிறந்த படங்களைக் கொண்டாடும் வகையில் 67 வது தென்னிந்திய பார்லே பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டன. பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 2020, 2021ம் ஆண்டுகளில் வெளியான சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் நடிகர் சூர்யா, நடிகைகள் ஜோதிகா, சாய்பல்லவி, பூஜா ஹெக்டே, அபர்ணா பாலமுரளி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    விருது மழையில் சூரரைப் போற்று

    விருது மழையில் சூரரைப் போற்று

    பிலிம்பேர் விருதுகள் விழாவில், பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர், கிருத்தி ஷெட்டி ஆகியோரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திக்நாத், ரமேஷ் இருவரும் இந்த விருது விழாவை தொகுத்து வழங்கினர். தமிழில் சூரரைப் போற்று படத்திற்காக சூர்யா சிறந்த நடிகர் விருதை வென்றார். தேசிய விருதை தொடர்ந்து சூரரைப் போற்று படத்திற்கு மற்றுமொரு தரமான விருது சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல், சூரரைப் போற்று படம் சிறந்த இயக்குநர் சுதா, சிறந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சிறந்த துணை நடிகை ஊர்வசி, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆண் பாடகர், பெண் பாடகர் என 8 பிரிவுகளில் விருதுகளை வென்று அசத்தியது.

    ஜெய்பீம் சிறந்த படம்

    ஜெய்பீம் சிறந்த படம்

    மேலும், தமிழில் சிறந்த படமாக சூர்யாவின் 'ஜெய்பீம்' விருதை வென்றது. அதில் நடித்த லிஜோமோஸ் ஜோஸ் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். சிறந்த துணை நடிகர் விருது சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த பசுபதிக்கு வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த டான்ஸ் கோரியோகிராபி விருது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்காக, தினேஷ் மாஸ்டருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில் எடுக்கப்பட்ட போட்டோக்களை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டிவிட்டரில் ஷேர் செய்திருந்ததோடு, விருது பெற்றது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

    தெலுங்கு, மலையாளம்

    தெலுங்கு, மலையாளம்

    அதேபோல், தெலுங்கில் சிறந்த படமாக புஷ்பா தேர்வானது. மேலும், புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் சிறந்த நடிகராகவும், சிறந்த இயக்குநராக சுகுமார், சிறந்த ஒளிப்பதிவு மிரோஸ்வா, சிறந்த பின்னனிப் பாடகர் 'ஸ்ரீ வள்ளி' பாடலுக்காக சித் ஸ்ரீராம், சிறந்த பாடகி 'ஓ அண்டாவா' பாடலைப் பாடிய இந்திராவதி ஆகியோர் விருதுகளை வென்றனர். சிறந்த நடிகைக்கான விருதை 'லஸ் ஸ்டோரி' படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு கிடைத்தது. மலையாளத்தில் 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படம் அதிகமான விருதுகளை வென்றுள்ளது.

    English summary
    The 67th South Indian Filmfare Awards 2022 was held in Bangalore on October 9 to celebrate the best films from Tamil, Telugu, Kannada, and Malayalam cinema. Awards were presented for the best films of 2020 and 2021 at the event. Surya’s Soorarai Pottru won the maximum no of awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X