திரைப்பட விழா... 5 விருதுகளை அள்ளிய தர்மதுரை!
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படம் ஆசியா விஷன் திரைப்பட விழா தமிழ்ப் பிரிவில் 5 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டுடியோ 9 ஆர்கே சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான தர்மதுரை அனைவரின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றது.

நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் (2016) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழ் திரைப்பட பிரிவில் தர்மதுரை திரைப்படம் 5 பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குனர் - சீனு ராமசாமி
சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி
சிறந்த நடிகை - தமன்னா
சிறந்த ஒளிப்பதிவு - ஷாஜி
இந்த நிகழ்வில் நடிகர்கள் மோகன்லால், நிவின் பாலி உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications