TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
61st grammy awards: 3 விருதுகளைத் தட்டிச் சென்ற லேடிகாகா.. குடும்பத்துடன் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்
லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச இசைக்கான 61வது கிராமி விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டது.
சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்று கிராமி விருதுகள். இந்தாண்டிற்கான கிராமி விருதுகள் விழா நேற்றிரவு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இந்த விழாவை 15 முறை கிராமி விருதை பெற்றவரான அலிசியா கீஸ் தொகுத்து வழங்கினார். 49 பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்கு கிராமி விருதுகள் வழங்கப்பட்டன.
மியூசிக் ஆல்பம்:
இதில், ஆண்டின் சிறந்த பாடலாக childish gambino-வின் This Is America என்ற மியூசிக் ஆல்பம் தேர்வு செய்யப்பட்டது. எலக்ட்ரானிக் ஆல்பம் மற்றும் நடனப்பிரிவில் உமன் வோர்ல்ட் வைட் (woman world wide) பாடலுக்கு விருது அளிக்கப்பட்டது.
லேடி காகா:
நடனப்பிரிவில் எல்க்ட்ரிசிட்டி விருது பெற்றது. சிறந்த பாப் பாடகருக்கான விருதை ஸ்வீட்னர் பாடலுக்காக ஆரியானா கிரான்டே பெற்றார். தனியாக பாப் அரங்கேற்றத்திற்கான விருதை லேடி காகா பெற்றார். தனி நபர் பிரிவு மற்றும் குழுப் பிரிவில் சிறந்த பாப் பாடலுக்கான விருதுகளை வென்ற லேடி காகா, சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் தட்டிச் சென்றார். இதில் Shallow என்ற பாடலை எழுதி பாடியதற்கு லேடி காகா இரு விருதுகள் பெற்றுள்ளார்.
நாட்டுப்புறப் பாடல்:
சிறந்த நாட்டுப்புற பாடல்களை இயற்றியவருக்கான விருதை ஸ்பேஸ் கௌபாய் பாடல் ஆல்பத்திற்கு பாடல்களை எழுதிய லூக் லாய்ர்ட் ( luke luird) , ஷேன் மிக் அனால்லி,( shane mc analley) மற்றும் கேசி மஸ்கிரேவ்ஸ் ( kacey musgraves) தட்டிச் சென்றனர். பட்டர்பிளைஸ் ஆல்பத்திற்காகவும் கேசி மஸ்கிரேவ்ஸ் சோலோ ஃபெர்மன்ஸ் பிரிவில் விருது பெற்றார்.
திரைப்பட இசை பிரிவு:
திரைப்பட இசை பிரிவில் சிறந்த இசைக்கான விருதை குவின்சி படத்திற்காக குவின்சி ஜோன்ஸ் பெற்றார். சிறந்த இசை வீடியோ பிரிவில் தில் இஸ் அமெரிக்காவுக்காக சைல்டிஷ் காம்பினோ பெற்றார்.இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மிலி சைரஸ் , கார்டி பி , கேமிலா காபேலோ ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களை அசர வைத்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான்:
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிக்கேல் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருது பெற்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இந்தியாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தனது குடும்பத்துடன் இந்த விருது விழாவில் கலந்து கொண்டார்.