»   »  62 வது பிலிம்பேர் விருதுகள்: மெட்ராஸுக்கு 3 விருதுகள்... தமிழில் சிறந்த நடிகர் தனுஷ்

62 வது பிலிம்பேர் விருதுகள்: மெட்ராஸுக்கு 3 விருதுகள்... தமிழில் சிறந்த நடிகர் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 62 வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா விமர்சையாக நடைபெற்து முடிந்துள்ளது. இதில் சிறந்த தமிழ் பட நடிகராக தனுஷ் தேர்வு செய்யப்பட்டு கவுரவுக்கப்பட்டார். வேலையில்லா பட்டதாரி படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் நடிகை ராதிகா மற்றும் ஐ.வி.சசி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

திரையுலகில் சிறந்தவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னையில் 62 வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


இதில் சிறந்த படமாக கத்தி தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குநராக கத்தி படத்தை இயக்கிய ஏ.ஆர் முருகதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.


தனுஷ்

தனுஷ்

சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார் தனுஷ். வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.


அசால்ட் சேதுக்கு அவார்டு

அசால்ட் சேதுக்கு அவார்டு

ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேதுவாக நடித்த பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே தேசிய விருது பெற்றுள்ளார்.


மெட்ராஸ் 3 விருது

மெட்ராஸ் 3 விருது

மெட்ராஸ் படத்தில் நடித்த கேத்ரீன் தெரஸா சிறந்த அறிமுக நடிகையாகவும் அதே படத்தில் நடித்த ரித்விகா சிறந்த துணை நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பின்னணி பாடகராக பிரதீப் குமார் தேர்வு செய்யப்பட்டார் மெட்ராஸ் படத்தில் "ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா?" பாடலை பாடிய பிரதீப் குமார் சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டார்.


நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார்

சைவம் படத்தில் அழகு பாடலை பாடிய உத்ரா உன்னி கிருஷ்ணன் சிறந்த பின்னணி பாடகி விருது பெற்றார். பாடலை எழுதிய நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியராருக்கான விருது அளிக்கப்பட்டது.


துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

ஓகே காதல் கண்மணி ஹீரோ துல்கர் சல்மான் சிறந்த அறிமுக நடிகராக தேர்வு செய்யப்பட்டார். வாயை மூடி பேசவும் படத்தில் நடித்ததற்காக அவருக்கு அறிமுக நடிகர் விருது வழங்கப்பட்டது.


English summary
Here’s a full list of the winner for the south Film fare Awards. Best actor Dhanush for Velaiyilla Pattathari
Please Wait while comments are loading...