»   »  சிறந்த படம், சிறந்த துணை நடிகர் உட்பட 3 தேசிய விருதுகளை வென்றது வெற்றிமாறனின் விசாரணை

சிறந்த படம், சிறந்த துணை நடிகர் உட்பட 3 தேசிய விருதுகளை வென்றது வெற்றிமாறனின் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 63 வது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த தமிழ்ப்படம் உட்பட மொத்தம் 3 தேசிய விருதுகளை விசாரணை வென்றுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ், முருகதாஸ், ஆனந்தி, சமுத்திரக்கனி, கிஷோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி வெளியான படம் விசாரணை.


காவல்துறையின் விசாரணை முறைகளை துல்லியமாக வெளிச்சம் போட்டுக் காட்டியதாக பலராலும் கொண்டாடப்பட்ட படம் விசாரணை.


லாக்கப்

லாக்கப்

கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் எம்.சந்திரகுமாரின் லாக்கப் நாவலைத் தழுவி இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.விமர்சனம்+ வரவேற்பு என இரண்டிலுமே இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தனுஷின் வொண்டர்பார் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை லைகா நிறுவனம் வாங்கி வெளியிட்டது.


ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

இதில் சமுத்திரக்கனியுடன் இணைந்து அட்டக்கத்தி தினேஷ், முருகதாஸ், ஆனந்தி, கிஷோர் போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். வெற்றிமாறன் இயக்கத்தில் பாடல்களே இல்லாமல் வெளியான இப்படத்திற்கு சிறந்த பின்னணி இசையை ஜி.வி.பிரகாஷ் கொடுத்திருந்தார்.


கிஷோர்

கிஷோர்

இப்படத்திற்கு சிறந்த படத்தொகுப்பை அளித்த மறைந்த கிஷோர் அவர்களுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.


சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

விசாரணை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது. இப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்திருந்தார்.


கமர்ஷியல் துளியும் இல்லாமல் வெளியான விசாரணை திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.English summary
63rd National Awards: Vetri Maran's Visaranai get 3 National Awards.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil