twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    67வது தேசிய திரைப்பட விருது … விருது பெற்றவர்களின் முழு விவரம் இதோ !

    |

    சென்னை : 2019ம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆண்டு தோறும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது இந்தியாவின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் வழங்கும் .

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் இந்த விருதுகள் அறிவிக்கப்படும் கொரோனா அச்சம் காரணம் தேசிய விருதுகள் அறிவிக்கப்படாத நிலையில் 2019ம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் விருது பெற்ற படங்கள் மற்றும் விருது பெற்றவர்களின் விவரங்களை பார்ப்போம்.

    அரசுன்

    அரசுன்

    வெற்றி மாறன் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான தனுஷ் நடித்த அசுரன் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலின் கருவை மையமாக வைத்து இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் முதல் பாதியில் தனுஷ் வயதான தோற்றத்திலும் இரண்டாம் பாதியில் இளைஞனாகவும் மிரட்டி இருப்பார்.

    ஜெர்ஸி

    ஜெர்ஸி

    கிரிக்கெட்டையும் காதலையும் மையமாகக் கொண்டு உருவான ஜெர்ஸி சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் சத்தியராஜ் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    ஜூரி விருது

    ஜூரி விருது

    பார்த்திபன் மட்டுமே நடித்து அவரே இயக்கி தயாரித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு சிறந்த விருது ஜூரி விருது மற்றும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது ரசூல் பூக்குட்டிக்கு அளிக்கப்பட உள்ளது. ஆஸ்கர் வரை சென்ற பார்த்திபன் படத்திற்கு தற்போது மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.

    மேலும் சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கும், சிறந்த நடிகைக்கான விருது மணி கர்னா பங்கா படத்திற்காக கங்கனா ரணாவத்திற்கும், சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடன இயக்குனருக்கான விருது ராஜூ சுந்தரத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

     விஸ்வாசம்

    விஸ்வாசம்

    கே டி என்கிற கருப்புத்துறை படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது நாக விஷாலுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது விஸ்வாசம் படத்தில் இசையமைத்ததற்காக டி இமானுக்கும், மறைந்த சுஷாந்த் நடித்த சிச்சுசோரோ திரைப்படம் சிறந்த இந்தி திரைப்படத்திற்கான விருதை பெற்றுள்ளது. மேலும் சிறந்த சினிமா விமர்சகருக்கான தேசிய விருதை கொல்கத்தாவைச் சேர்ந்த சோஹினி சத்தோபத்யாயா வென்றுள்ளார். சிறந்த இசையமைப்பாளர் பிஷாத்ஜோதி வென்றுள்ளார்.

    English summary
    67th national film awards winners full list
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X