twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய திரைப்பட விருதுகள் 2022: சிறந்த நடிகர் சூர்யா..மொத்தமாக 5 விருதுகளை வென்ற சூரரைப்போற்று

    |

    டெல்லி: 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன..

    ஆண்டுதோறும் மத்திய அரசின் சார்பில் சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை உள்ளிட்ட பல பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

    அதன்படி, 2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது திரைத்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆண்டுதோறும் மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் வெளியான சிறந்த படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், இசையமைப்பாளர் உட்பட ஏராளமான பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதுகள், திரைத்துறையினரின் மிகப் பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 68வது தேசிய விருதுகள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

    பணத்துக்காக எல்லாம் செஞ்சிட்டு இப்போ இது தேவையா?: மன்னிப்புக் கேட்ட மலையாள நடிகர் லால்! பணத்துக்காக எல்லாம் செஞ்சிட்டு இப்போ இது தேவையா?: மன்னிப்புக் கேட்ட மலையாள நடிகர் லால்!

    2021ம் ஆண்டுக்கான தேசிய விருது விழாவில், 2020ம் ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்கள், பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டன. ரசிகர்களும் தாங்கள் விரும்பிய படங்களுக்கும், கலைஞர்களுக்கும் விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். சில படங்கள் வெளியானதுமே தேசிய விருதுகளை பெறும் என ரசிகர்களாலும், சினிமா விமர்சகர்களாலும் ஆருடம் சொல்லப்பட்டது.

    சிறந்த திரைப்படம்

    சிறந்த திரைப்படம்

    அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படுவது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது தான். இந்தியாவில் உள்ள 30 மொழிகளிலும் இருந்து 305 படங்கள் போட்டியிட்டன. இதில் சிறந்த படமாக எது அறிவிக்கப்படும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், தமிழில் வெளியான "சூரரைப் போற்று' சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்று அசத்தியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இத்திரைப்படம் உண்மை சம்பவ அடிப்படையில் கதைக்களத்தின் பின்னணியில் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த நடிகர், நடிகை

    சிறந்த நடிகர், நடிகை

    திரைப்படங்களைத் தொடர்ந்து சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை விருதினை யார் யார் வெல்லப் போகிறார்கள் என்ற கேள்விக்கும் தற்போது விடை கிடைத்துள்ளது. அதன்படி, சூரரைப்போற்று படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது, அஜய் தேவ்கானுடன் அவர் விருதை பகிர்ந்துக்கொள்கிறார். அவரது பாத்திரம் ஒருவித புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக, படம் வெளியான போது பலரும் பாராட்டியிருந்தனர். அதேபோல் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அபர்ணா பாலமுரளி தட்டிச் சென்றார்.சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டுள்ளது.

    சிறந்த துணை நடிகர், துணை நடிகை

    சிறந்த துணை நடிகர், துணை நடிகை

    சிறந்த நடிகர், நடிகையைத் தொடர்ந்து சிறந்த துணை நடிகர், துணை நடிகை விருதும் அறிவிக்கப்பட்டன. அதில், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தில் நடித்த லட்சுமி பிரியா சந்திர மவுலி சிறந்த துணை நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மேலும், சில பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சிறந்த இயக்குநர்

    சிறந்த இயக்குநர்

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த இயக்குநர் விருது அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் மறைந்த சச்சிதனந்தனுக்கு கிடைத்துள்ளது. மலையாள மொழியில் அவர் இயக்கிய அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னணியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது தமன் அறிவிக்கப்பட்டுள்ளாது. சிறந்த் ஒளிப்பதிவாளர் பின்னணி இசை விருது ஜிவி பிரகாஷுக்கு சூரரைப்போற்றுக்காக வழங்கப்பட்டுள்ளது.

    சிறந்த தமிழ்ப் படம்

    சிறந்த தமிழ்ப் படம்

    68வது தேசிய விருது விழாவில் சிறந்த படமாக சூரரைப்போற்று படம் பெற்றுள்ளது. டாக்குமெண்டரி பிரிவில் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படம் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கிய இத்திரைப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.68வது தேசிய விருது விழாவில் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" சிறந்த படமாக தேர்வாகியுள்ளது. வசந்த் இயக்கிய இத்திரைப்படத்தில் கருணாகரன், லக்ஷ்மி, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் சிறந்த எடிட்டிங் விருதையும் வென்றுள்ளது. ஸ்ரீகர் பிரசாத் சிறந்த எடிட்டர் விருதை பெறுகிறார். மலையாளத்தில் சிறந்தப் படமாக சென்னா ஹெக்டே. இயக்கிய 'திங்களச்ச நிச்சயம்' தேர்வாகியுள்ளது.

    சிறந்த இசை

    சிறந்த இசை

    சிறந்த இசையமைப்பாளருக்கான விருது தமனுக்கு கிடைத்துள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஆலா வைகுண்டபுரம்லு' படத்தின் பாடல்களுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பின்னணி இசைக்கான விருது, தமிழில் சூரரைப் போற்று படத்திற்கு இசைமைத்த ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி பாடகிக்கான விருது அய்யப்பனும் கோஷியும் படத்தில் பாடிய நாச்சம்மாவுக்கு கிடைத்துள்ளது.

    சிறந்த திரைக்கதை, வசனம்

    சிறந்த திரைக்கதை, வசனம்

    சிறந்த திரைக்கதைக்கான விருதும் 'சூரரைப் போற்று' படத்திற்கு கிடைத்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, ஷாலினி உஷா இருவரும் இந்த விருதினை பெறுகின்றனர். அதேபோல், சிறந்த வசனத்திற்கான விருது யோகிபாபு 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.

    English summary
    68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்தபடமாக சூரரைப்போற்று, சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி என 5 விருதுகளை சூரரைப்போற்று அள்ளியுள்ளது.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X