Don't Miss!
- News
வள்ளுவரை விட கருணாநிதி சிறந்தவரா? பேனா நினைவு சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் பாஜக கேள்வி-சலசலப்பு
- Finance
Budget 2023: பட்ஜெட் நாளில் கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை எப்படி இருந்தது தெரியுமா?
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
93 வது ஆஸ்கார் விருதுகள்...3 விருதுகளை வென்ற நோமட்லேண்ட்...வெற்றியாளர்கள் முழு விபரம்
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25 இரவு 8 மணிக்கும், இந்திய நேரப்படி ஏப்ரல் 26 காலை 5.30 மணிக்கும் இவ்விழா துவங்கியது. முன்னதாக ரெட் கார்பெட் நிகழ்வு நடைபெற்றது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு, விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விழா நடைபெற்றது.

வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு, இரண்டு மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது.

மாங்க், மா ரெயினிஸ் பிளாக் பாட்டம், சோல், ஜுடாஸ் அண்ட் பிளாக் மெசியா, மாங்க் ஆகிய படங்கள் 2 ஆஸ்கார் விருதுகளை வென்றன. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என மூன்று முக்கிய விருதுகளை நோமட்லேண்ட் படம் பெற்றுள்ளது.

ஆஸ்கார் விருது பெற்றவர்கள் முழு விபரம் :
சிறந்த மூல திரைக்கதை - ப்ராமிஸிங் யங் வுமன்
சிறந்த தழுவல் கதை - தி ஃபாதர்
சிறந்த சர்வதேச திரைப்படம் - அனதர் ரவுண்ட் ( டென்மார்க் நாட்டு படம்)
சிறந்த துணை நடிகர் - டேனியல் கல்லுயா (ஜுடாஸ் அண்ட் பிளாக் மெசியா)
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - செர்கியோ லோபெஸ் (மா ரெயினிஸ் பிளாக் பாட்டம்)
சிறந்த ஆடை வடிவமைப்பு - ஆன் ரோத் (மா ரெயினிஸ் பிளாக் பாட்டம்)
சிறந்த இயக்குனர் - சோலி ஜாவோ ( நோமட்லேண்ட் )
சிறந்த ஒலி அமைப்பு - சவுண்ட் ஆஃப் மெட்டல்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்
சிறந்த அனிமேடட் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ
சிறந்த அனிமேடட் படம் - சோல்
சிறந்த ஆவண குறும்படம் - கோலெட்
சிறந்த ஆவண படம் - மை ஆக்டோபஸ் டீச்சர்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - டெனெட்
சிறந்த துணை நடிகை - யூன் யூ ஜங் ( மினாரி)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டொனல்ட் கிரஹம் பர்ட்
சிறந்த செட் அலங்காரம் - ஜான் பாஸ்கலடூபிள் டாகர்
சிறந்த ஒளிப்பதிவு - எரிக் மெஸ்செர்மிட்
சிறந்த எடிட்டிங் - மைக்கேல் ஈ.ஜி.நெல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)
மனிதாபிமான விருது - டைலர் பெர்ரி
சிறந்த மூல இசை - சோல்
சிறந்த மூல பாடல் - ஜுடாஸ் அண்ட் பிளாக் மெசியா ( ஃபைட் ஃபார் யூ பாடல்)
சிறந்த படம் - நோமட்லேண்ட்
சிறந்த நடிகை - பிரான்சிஸ் மெக்டார்மண்ட் (நோமட்லேண்ட்)
சிறந்த நடிகர் - ஆன்டனி ஹாப்கின்ஸ் (மாங்க் )
93 rd Oscar Academy awards 2021 : Winners full list here
93 வது ஆஸ்கார் விருதுகளை வென்றவர்களின் முழு விபரம்