»   »  எடிசன் விழாவில் கலக்கிய அஜீத், ஜெயம் ரவி படங்கள்.. அதிகபட்ச விருதுகளை கைப்பற்றி சாதனை

எடிசன் விழாவில் கலக்கிய அஜீத், ஜெயம் ரவி படங்கள்.. அதிகபட்ச விருதுகளை கைப்பற்றி சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 9 வது எடிசன் விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் அஜீத் மற்றும் ஜெயம் ரவியின் படங்கள் அதிக விருதுகளை கைப்பற்றி சாதனை புரிந்தன.

வருடாவருடம் சினிமா கலைஞர்களை கவுரவிக்கும் பொருட்டு எடிசன் விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை உட்பட மொத்தம் 21பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் அதிகபட்சமாக நடிகர் அஜீத் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படங்கள் அதிக விருதுகளை வென்று சாதனை படைத்தன.

எடிசன் விருதுகள்

9 வது எடிசன் விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.நேற்று நடைபெற்ற இந்த விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை உட்பட மொத்தம் 21 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

தனி ஒருவனுக்கு 5

விழாவில் சிறந்த நடிகர் -ஜெயம் ரவி, சிறந்த இயக்குநர் - மோகன் ராஜா, சிறந்த குணச்சித்திர நடிகர்- தம்பி ராமையா மற்றும் சிறந்த புதுமுக இசையமைப்பாளர் - ஹிப்ஹாப் ஆதி, சிறந்த வில்லன் - அரவிந்த்சாமி போன்ற 5 பிரிவுகளில் தனி ஒருவன் படம் விருதுகளைக் குவித்தது.

அஜீத் படங்கள்

இதே போல நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான படங்கள் என்னை அறிந்தால், வேதாளம் படங்கள் அதிக விருதுகளை வென்று சாதனை படைத்தது. சிறந்த பின்னணி இசை - அனிருத் (வேதாளம்), சிறந்த எடிட்டர்- ரூபன் (வேதாளம்) சிறந்த நடன அமைப்பாளர் சதீஷ் -அதாரு அதாரு (என்னை அறிந்தால்), சிறந்த வில்லன் -அருண் விஜய் (என்னை அறிந்தால்) என்று மொத்தம் 4 பிரிவுகளில் அஜீத் படங்கள் விருதுகளை வென்றது.

சிறந்த மாஸ் ஹீரோ

விழாவில் சிறந்த மாஸ் ஹீரோ -தனுஷ் (மாரி), பேவரைட் பாடல் - டங்காமாரி( அனேகன்), சிறந்த நகைச்சுவை நடிகர் -சதீஷ்(தங்கமகன்) ஆகிய 3 பிரிவுகளில் தனுஷ் படங்கள் விருதை வென்றன.

சிறந்த நடிகை

மாஸ் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ப்ரணிதாவுக்கு 2015 ம் ஆண்டின் சிறந்த நடிகை விருது கிடைத்தது.

சிறந்த நடிகர், நடிகை

சிறந்த வளர்ந்து வரும் நடிகை விருது - கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்தது.இதேபோல சிறந்த பொழுதுபோக்கு நடிகர் விருதை சிவகார்த்திகேயனும், சிறந்த புதுமுக நடிகர் விருதை ஜி.வி.பிரகாஷும் பெற்றனர்.

சிறந்த பாடல், பாடலாசிரியர்

கடந்த வருடத்தின் சிறந்த குத்துப்பாடல் விருதை கொம்பன் படத்திற்காக வேல் முருகனும், சிறந்த பாடலாசிரியர் விருதை மதன் கார்க்கியும் (பூக்களே சற்று ஓய்வெடுங்கள் -ஐ) பெற்றார்.

சிறந்த புதுமுக இயக்குநர்

சிறந்த புதுமுக இயக்குநர் விருதை பிரம்மாவும் (குற்றம் கடிதல்), சிறந்த மனிதநேய விருதை நடிகர் ராகவா லாரன்ஸும் வென்றனர். இதே போல சிறந்த துணை நடிகர் விருதை காஞ்சனா 2வில் நடித்தற்காக ஸ்ரீமான் பெற்றார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இயக்குநர் மணிகண்டனின் 'காக்கா முட்டை' படத்திற்கு விருது எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
2016: 9th Edison Awards Complete Winners List. Ajith& Jayam Ravi Movies Capturing Most Awards in this Function.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil