»   »  மீண்டும் ஆஸ்கர் ரேஸில் ஏ.ஆர். ரஹ்மான்: மீண்டும் இரண்டு ஆஸ்கர் கிடைக்குமா?

மீண்டும் ஆஸ்கர் ரேஸில் ஏ.ஆர். ரஹ்மான்: மீண்டும் இரண்டு ஆஸ்கர் கிடைக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பீலே: பர்த் ஆப் எ லெஜன்ட் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 2 பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 2009ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். இந்நிலையில் அவர் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

A.R. Rahman again in Oscar race

பிரேசிலை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலேவின் வாழ்க்கை வரலாற்று படமான பீலே: பர்த் ஆப் எ லெஜன்ட்டுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

அந்த படத்தில் வரும் ஜிங்கா பாடலுக்காக சிறந்த பாடலுக்கான பிரிவில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இசைப்பிரிவிலும் அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் ஹாலிவுட் பகுதியில் இருக்கும் டால்பி தியேட்டர் மற்றும் ஹைலேண்ட் சென்டரில் நடைபெறுகிறது.

English summary
It could be a double whammy for Indian music maestro A.R. Rahman once again at the Academy Awards as his work for 'Pele: Birth of a Legend' has found a spot in the list of Oscar contenders for the year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil