»   »  குழப்பமோ குழப்பம்: பாகுபலி 2 படத்தில் பணியாற்றாதவருக்கு தேசிய விருது அறிவிப்பு

குழப்பமோ குழப்பம்: பாகுபலி 2 படத்தில் பணியாற்றாதவருக்கு தேசிய விருது அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீதேவிக்கு தேசிய விருது. சிறந்த தமிழ்படம் To Let

டெல்லி: பாகுபலி 2 படத்திற்கு வழங்கப்பட்டுள்ள தேசிய விருதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

Abbas Ali Moghul gets national award for what?

ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருதும், மறைந்த நடிகர் வினோத் கன்னாவுக்கு தாதா சாகேப் பால்கே விருதும் கிடைத்துள்ளது. பாகுபலி 2 படத்திற்கு சிறந்த ஆக்ஷன் டைரக்ஷன் உள்பட 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாகுபலி 2 படத்தில் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்ததற்காக அப்பாஸ் அலி மொகுலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

ஆனால் அப்பாஸ் பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களில் வேலை செய்யவில்லை என்று தயாரிப்பாளர் ஷோபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பாகுபலி 1 மற்றும் 2 படங்களில் பீட்டர் ஹெய்ன் தான் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்துள்ளார்.

இதனால் தேசிய விருது அறிவிப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

English summary
Best action direction national award has been given to Abbas Ali Moghul for Baahubali 2 but he hasn't worked in the superhit movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X