»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

இயக்குநர் டி.ராஜேந்தர், நடிகர் அஜித், நடிகை தேவயானி உள்பட 54 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், கலைத்துறையில் சிறந்த பணியாற்றிய கலைஞர்களைப் பாராட்டி ஆண்டுதோறும் கலைமாமணி விருதினை வழங்கிவருகிறது. விருது பெறுபவர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

இந்த வருடத்திற்கான விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம் வருமாறு:

சாலமன் பாப்பையா: இயற்றமிழ் கலைஞர், மதுரை ஜி.எஸ்.மணி: இசை ஆசிரியர், டாக்டர் நர்மதா: வயலின் கலைஞர், நெல்லை அருள்மணி: தவில் கலைஞர்,லீலா: நாடக நடிகை, செந்தில்குமார்: விகடக் கலைஞர், கணபதி ஸ்தபதி: சிற்பக் கலைஞர், தூத்துக்குடி பிச்சைக்கனி: ஒயிலாட்டக் கலைஞர், கே.என்.காளை:நாடக இயக்குநர், டி.ராஜேந்தர்: திரைப்பட இயக்குநர், அஜித்குமார்: திரைப்பட நடிகர், தேவயானி: திரைப்பட நடிகை, ஆனந்தராஜ்: குணசித்திர நடிகர் உள்பட 54பேருக்கு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil