»   »  ருஸ்டம் படத்துக்காக அக்ஷய் குமாருக்கு சிறந்த நடிகர் விருது!

ருஸ்டம் படத்துக்காக அக்ஷய் குமாருக்கு சிறந்த நடிகர் விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ருஸ்டம் படத்துக்காக அக்ஷய் குமாருக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது.

64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன.

Akshay Kumar gets Best actor award for Rustom

ஆனால் அந்த விருது அக்ஷய் குமாருக்கு ருஸ்டம் படத்துக்காகக் கிடைத்துள்ளது. டினு சுரேஷ் தேசாய் இயக்கியிருந்த ருஸ்டம் படத்தை 7 பேர் தயாரித்திருந்தனர்.

1950களில் நடப்பது போன்ற கதையமைப்பு. இலியானா, ஈஷா குப்தா நாயகிகளாக நடித்திருந்தனர்.

நானாவதி என்ற கப்பல் படை அதிகாரியின் உண்மை வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படியில் உருவான படம் இது. ரூ 65 கோடி செலவில் உருவாக்கப்பட்டு, 200 கோடிக்கு மேல் வசூலித்தது இந்தப் படம்.

அக்ஷய் குமார் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்போது தேசிய விருது கிடைத்துள்ளது.

English summary
Akshay Kumar has announced as best actor for Rustom movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil