»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

தேசிய விருது தேர்வுக் குழுவிடம் கடுமையாக வாதாடித் தான் கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு 6 விருதுகள்கிடைக்கச் செய்துள்ளார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் அலெக்ஸ்.

குழுவுக்கு மும்பையை சேர்ந்த பிரகாஷ் ஷா தலைவராக இருந்தார். குழுவில் மொத்தம் 21 பேர் இருந்தனர். அந்தக்குழுவில் இருந்த ஒரே ஒரு தமிழர் அலெக்ஸ் தான்.

சுமார் 200 படங்கள் போட்டிக்கு வந்துள்ளன. இதில் முதல் சுற்றில் 25 படங்கள் போட்டிகாக தேர்வாகியுள்ளன.அதிலிருந்து சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழில் இருந்து மட்டும் அன்பே சிவம், கன்னத்தில் முத்தமிட்டால், ரமணா, ரன், உன்னை நினைத்து, சொல்ல மறந்தகதை, வில்லன், பைவ் ஸ்டார், ஜெமினி, கிங், சாமுராய், ஒருத்தி, நண்பா நண்பா என 19 படங்கள் போட்டியில்பங்கேற்றன.

இவற்றைப் பார்த்த தேர்வுக் குழுவினர் கன்னத்தில் முத்தமிட்டால், ரன், நண்பா நண்பா, ஒருத்தி, அன்பே சிவம்மற்றும் பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கிய தயா ஆகியவற்றை அடுத்த சுற்றுக்குத் தேர்வு செய்தனர்.

இதில் அலெக்ஸ், கன்னத்தில் முத்தமிட்டாலுக்காக கடுமையாக வாதாடியுள்ளார். சிறந்த கதை, இசை, கலை,எடிட்டிங், ஆடியோகிராபி, சிறந்த நடிகை, குழந்தை நட்சத்திரம் என எல்லா விருதுகளுக்கும் கன்னத்தில்முத்தமிட்டாலை இவர் முன்னிருத்திப் பேசி வாதாடியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தமிழ் படத்தின் சிறப்பு அம்சங்களை எடுத்துச் சொல்லி வாதாட நான் ஒருவன்மட்டுமே அங்கு இருந்தேன். கடைசியில் எனது போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது என்றார்.

கன்னத்தில் முத்தமிட்டாலில் சிறப்பாகத நடித்திருந்த சிம்ரனுக்குத் தான் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்திருக்கவேண்டும் என்கிறார் இவர். இது தொடர்பாக இவருக்கும் மற்ற தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் இடையேபெரும் மோதலே நடந்துள்ளது. ஆனால், சிம்ரன் சொந்தக் குரலில் பேசவில்லை என்ற டெக்னிகல் காரணத்தைச்சொல்லி விருது தர மறுத்துவிட்டார்களாம் மற்ற உறுப்பினர்கள்.

அதே போல சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு சந்திர சேகரை இவர் முன் வைக்க, ஜாக்கி ஷராபை முன்வைத்து மற்றவர்கள் பேச அப்போதும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இனி நான் பேசவே மாட்டேன்,யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் என கிட்டத்தட்ட போராட்டத்தில் இறங்க, இறுதியில்சந்திர சேகர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அதே போல குழந்தை நட்சத்திரத் தேர்வில் மக்டி என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த சுவேதாபிரசாத்துக்கும், கன்னத்தில் முத்தமிட்டாலில் நடித்த கீர்த்தனாவுக்கும் கடும் போட்டி இருந்ததாம்.

பெற்ற தாயை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தை அழுத்தமான நடிப்பால் கீர்த்தனாவெளிப்படுத்தியதை ஒருமுறைக்குப் பலமுறை எடுத்துச் சொல்லி வாதாடியதால் தான் கீர்த்தனா தேர்வுசெய்யப்பட்டார் என்கிறார் அலெக்ஸ்.

ஆனால், முதல் சுற்றில் சிறந்த படங்களைத் தேர்வு செய்ய தேர்வுக் குழுவினர் வாக்களித்தபோது அலெக்ஸ்வாக்களித்தது கன்னத்தில் முத்தமிட்டாலுக்கு அல்ல, அன்பே சிவம் படத்திற்குத் தானாம்!.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil