SIIMA விருதுகள்: சிறந்த நடிகர் விருதை இரண்டாவது முறையாக வென்று அசத்திய புஷ்பா நாயகன்!

பெங்களூரு: பத்தாவது SIIMA விருதுகள் விழா பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், இயக்குநர் உள்ளிட்ட பலவேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தெலுங்கில் சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் வென்று அசத்தியுள்ளார்.

10வது ஆண்டில் SIIMA விருதுகள்

10வது ஆண்டில் SIIMA விருதுகள்

இந்தியாவின் முக்கியமான திரைப்பட விருதுகளான SIIMA விருது நிகழ்ச்சி, பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் திரைத்துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கு இந்த SIIMA விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த திரைப்படம், இயக்குநர், நடிகர், நடிகை, உட்பட பல பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற சைமா விருது, இந்தாண்டு நேற்றும், இன்றும் (10 11) பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

விருது விழாவில் பிரபலங்கள் பங்கேற்பு

விருது விழாவில் பிரபலங்கள் பங்கேற்பு

இரண்டு நாட்களாக நடைபெறும் SIIMA விருதுகள் வழங்கும் விழாவில், கமல், அல்லு அர்ஜுன், ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர். முன்னதாக விழாவில் கலந்துகொண்ட திரை நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விருது விழாவில் தெலுங்கில் 'புஷ்பா' திரைப்படம் விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

சிறந்த நடிகராக அல்லு அர்ஜுன்

சிறந்த நடிகராக அல்லு அர்ஜுன்

தெலுங்கில் சிறந்த திரைப்படமாக 'புஷ்பா : தி ரைஸ்' தேர்வாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியான புஷ்பா, ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. மேக்கிங், திரைக்கதை என அனைத்து ஏரியாவிலும் துவம்சம் செய்த புஷ்பா, 400 கோடிக்கும் மேல் வசூலித்து அசர வைத்தது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அல்லு அர்ஜுன் இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான SIIMA விருதை பெறுகிறார்.

விருதுகளை குவித்த புஷ்பா

விருதுகளை குவித்த புஷ்பா

மேலும், புஷ்பா படத்தின் இயக்கினர் சுகுமார், சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார். அதேபோல், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களுமே பட்டித் தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. குறிப்பாக 'ஊ சொல்றியா மாமா' பாடல் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது. மேலும், புஷ்பா படத்தில் இடம்பெற்ற 'ஸ்ரீவள்ளி' பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியர் விருதை சந்திரபோஸ் வென்றுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருதை, புஷ்பா படத்தில் நடித்த ஜெகதீஷ் பிரதாப் பெற்றுள்ளார். இதனால், புஷ்பா படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X