twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தாவோஸ் விழாவில் கிறிஸ்டல் விருது பெறும் ஏ.ஆர்.ரஹ்மான்

    By Sudha
    |

    சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார அமைப்புக் கூட்டத்தில், இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிறிஸ்டல் விருது அளிக்கப்படவுள்ளது.

    உலக இசை மற்றும் கலையில் ரஹ்மான் நிகழ்த்திய சாதனைகளுக்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்படவுள்ளது.

    11 நாடுகளைச் சேர்ந்த 2500 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகவியலாளர்கள், கலைஞர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

    இந்தியாவிலிருந்து மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், அனந்த் சர்மா, கமல்நாத், பிரபுல் படேல் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்கிறது.

    மேலும், இவர்களுடன் முகேஷ் அம்பானி உள்ளிட்ட 130 பேர் கொண்ட பிரமாண்டக் குழுவுடன் இந்திய தொழிலக சம்மேளனக் குழுவும் கூட்டத்தில் கலந்து கொள்கிறது.

    ஐந்து நாள் நடைபெறும் இந்த மாநாடு ஜனவரி 26ம்தேதி தொடங்குகிறது.

    English summary
    Composer A R Rahman will be attending the World Economic Forum meeting in Davos, Switzerland, where he will receive the Crystal Award for his achievements in the world of art and music. Rahman will be in the company of over 2,500 participants from over 11 countries representing business leaders, heads of governments and states, academicians, artists and faith leaders. Home Minister P Chidambaram, Commerce and Industry Minister Anand Sharma, Urban Development Minister Kamal Nath and Heavy Industries Minister Praful Patel along with Planning Commission Deputy Chairman Montek Singh Ahluwalia will participate in the meeting. CII, a partner of the Geneva-based WEF, is taking a 130- member delegation which includes Mukesh Ambani, Sunil Bharti Mittal of Bharti Enterprises and others. The five-day meeting will start from January 26.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X