»   »  அன்று இரட்டை ஆஸ்கர்... இன்று இரட்டை தேசிய விருது... ஏஆர் ரஹ்மான் சாதனை!

அன்று இரட்டை ஆஸ்கர்... இன்று இரட்டை தேசிய விருது... ஏஆர் ரஹ்மான் சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீதேவிக்கு தேசிய விருது. சிறந்த தமிழ்படம் To Let

இதன் மூலம் அதிக தேசிய விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.

ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்காக 2009-ம் ஆண்டு ரஹ்மான் இரட்டை ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். ஒரு விருது சிறந்த பாடலுக்கு (ஜெய் ஹோ... பாடலாசியர் குல்சாருடன்), மற்றொரு விருது சிறந்த இசைக்காக வழங்கப்பட்டது.

AR Rahmans first twinh National Award

சரியாக பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இது போன்றதொரு பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த ஆண்டு மாம் படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக ஒரு விருதையும், காற்று வெளியிடை படத்தின் பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினையும் ஏ ஆர் ரஹ்மான் பெற்றுள்ளார்.

இதற்கு முன் ரோஜா, மின்சாரக் கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக நான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினைப் பெற்றுள்ளார் ரஹ்மான்.

இதுவரை இளையராஜாதான் அதிக முறை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளராக இருந்தார். அவருக்கு 5 முறை தேசிய விருது கிடைத்தது. இப்போது ஏ ஆர் ரஹ்மான் 6வது விருதினைப் பெற்றதன் மூலம் முதலிடத்துக்கு வந்துள்ளார்.

English summary
AR Rahman has won his twin national award for the first time this year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X