»   »  புதுயுகம் டிவியில் தாமஸ் எடிசன் விருது... ஆர்யா, நாசருக்கு விருது வழங்கி கவுரவம்

புதுயுகம் டிவியில் தாமஸ் எடிசன் விருது... ஆர்யா, நாசருக்கு விருது வழங்கி கவுரவம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறந்த குளிர்பான விளம்ரத்துக்கான ஃபெஸ்டிவ் செலப்ரேட்டர்ஸ் விருது மவுண்டன்டியு விளம்பரத்தில் நடித்த ஆர்யாவிர்க்கும், சிறந்த கட்டுமானம் விளம்பரத்தில் நடித்ததற்கான விருது தென்னிந்திய நடிகர் சங்கதலைவர் திரு.நாசர்அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

புதுயுகம் தொலைக்காட்சியில் இம்மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்று கிழமை மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை "தாமஸ்எடிசன் அட்வர்டைஸ்மெண்ட் விருது" ஒளிபரப்பாக உள்ளது.

நடிகர்கள் பங்கேற்பு

நடிகர்கள் பங்கேற்பு

சிறந்த விளம்பரங்களுக்கான தாமஸ் எடிசன் அட்வர்டைஸ்மெண்ட் விருது (TEA Awards) வழங்கும் விழாவில் நடிகர் நடிகைகள் ஆர்யா, நாசர், ஜி.வி. பிரகாஷ், சுப்பு பஞ்சு, பார்த்திபன், கணேஷ் வெங்கட்ராமன், ஜனனிஐயர் ,லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் விருது பெற்றனர்.

தாமஸ் எடிசன் விருது

தாமஸ் எடிசன் விருது

எடிசன் அவார்ட்ஸ் அமைப்பின் தலைவர் ஜெ.செல்வகுமார் இந்த 2013ம் ஆண்டிலிருந்து புதிதாக விளம்பரங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்திவருகிறார். இந்தஆண்டும் "தாமஸ்எடிசன் அட்வர்டைஸ்மெண்ட் விருது" (TEA Awards) வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

ஆன்லைன் வாக்கெடுப்பு

ஆன்லைன் வாக்கெடுப்பு

இந்த ஆண்டு சிறந்த விளம்பரங்கள், தயாரித்த நிறுவனங்கள் மற்றும் அதில் நடித்த கலைஞர்களுக்கு ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் கிடைத்தவாக்குகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன. சென்னைலேடி ஆண்டாள் அரங்கில் நடந்த இந்த வண்ண மிகுவிழாவில் பிரபலமான விளம்பரங்களில் நடித்த நடிகர் நடிகைகள், அந்த விளம்பரங்களைத்தயாரித்த நிறுவனங்கள் பங்கேற்றனர்.

ஆர்யா - நாசர்

ஆர்யா - நாசர்

இந்நிகழ்ச்சியில் சிறந்த குளிர்பான விளம்ரத்துக்கான பெஸ்டிவ் செலப்ரேட்டர்ஸ் விருது மவுண்டன்டியு விளம்பரத்தில் நடித்த ஆர்யாவிர்க்கும், சிறந்த கட்டுமானம் விளம்பரத்தில் நடித்ததற்கான விருது தென்னிந்திய நடிகர் சங்கதலைவர் நாசருக்கு வழங்கப்பட்டது.

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

குளிர்பானவிளம்பரத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் மலேஷிய தூதர் சித்ராதேவி ராமையா, அஸ்ட்ரோ டாக்டர் ராஜாமணி ஆகியோர் பங்கேற்றனர்.

பவர்ஸ்டார்

பவர்ஸ்டார்

நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பவர்ஸ்டார் விருது வழங்கினார். விழாவில் ஜெகன், கணேஷ் வெங்கட்ராம் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சி புதுயுகம் தொலைகாட்சியில் இம்மாதம் 22 ஆம் தேதி ஞாயிறு கிழமை மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

English summary
Tea awards for best advertisement films and actors distributed to leading actor in Tamil Industry including Nasar and Arya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil