»   »  ஸ்னேகா, பூஜா, சந்திரமுகிக்கு விருது!

ஸ்னேகா, பூஜா, சந்திரமுகிக்கு விருது!

Subscribe to Oneindia Tamil

திரைத் துறையினரை ஊக்கப்படுத்துவதற்காக கொடைக்கானல் அகில இந்திய வானொலி நிலையம் ஏற்படுத்தியுள்ள விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சந்திரமுகி, தம்பி உள்ளிட்ட படங்களுக்கு விருது கிடைத்துள்ளது.

கொடைக்கானல் எப்.எம் நிலையம் ஏற்படுத்தியுள்ள இந்த விருதுகளை, நேயர்களே வாக்களித்து தேர்வு செய்துள்ளனர். நேயர்களின் அதிக வாக்குகளைப் பெற்று விருது பெற்றவர்கள் குறித்த பட்டியலை கொடைக்கானல் எப்.எம். அறிவித்துள்ளது.

சிறந்த இயக்குநராக சந்திரமுகியை இயக்கியதற்காக பி.வாசு பெற்றுள்ளார். விஷாலுக்கு சிறந்த நடிகர் விருதும், தம்பி படத்தின் நாயகி பூஜாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது.

புதுப்பேட்டை மற்றும் ஏபிசிடி படங்களில் சிறப்பாக நடித்ததற்காக சினேகாவுக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது.

ஏபிசிடி படத்தின் இயக்குநர் ஷரவண சுப்பையாவுக்கும் சிறப்பு விருது கிடைத்துள்ளது. ஜெயம் இயக்குநர் ராஜாவுக்கு, எம். குமரன், சன் ஆப் மகாலட்சுமி படத்துக்காக சிறப்பு விருது கிடைத்துள்ளது.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சிறந்த இசையமைப்பாளராக சபேஷ் முரளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தவமாய் தவமிருந்து படத்துக்காக இந்த விருது கிடைத்துள்ளது.

அதேசமயம், இமான், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது. காதல் படத்தில் சிறப்பாக பாடியதற்காக ஹரிச்சரனுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த காமெடியனாக கஞ்சா கருப்பு தேர்வாகியுள்ளார். விவேக்குக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது. விஷாலைத் தவிர விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்களுக்கான விருதினை நேரில் பெற்றுக் கொண்டனர். விஷாலுக்கான விருதினை அவரது செயலாளர் பெற்றுக்கொண்டார்.

Please Wait while comments are loading...