»   »  சிம்பு, விஷால், ஜெயம் ரவி,திரிஷா, நவ்யா நாயருக்கு கலைமாமணி

சிம்பு, விஷால், ஜெயம் ரவி,திரிஷா, நவ்யா நாயருக்கு கலைமாமணி

Subscribe to Oneindia Tamil

நடிகர்கள் சிம்பு, ஜெயம் ரவி, நடிகைகள் திரிஷா, நவ்யா நாயர் உள்ளிட்ட 60 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் மற்றும் நாடகத் துறையில் விருது பெறுவோர் பட்டியல்

நடிகர்கள் சிம்பு, விஷால், ஜெயம் ரவி, ஜீவா, வினீத், கஞ்சா கருப்பு, நடிகைகள் திரிஷா, நவ்யா நாயர், சிஐடி சகுந்தலா, ஆர்த்தி (சன் டிவி டாப் டென் நிகழ்ச்சியில் வரும் குண்டு நடிகை), தயாரிப்பாளர் கோவைத்தம்பி, இயக்குநர் சீமான், பாடலாசிரியர்கள் பா.விஜய், முத்துக்குமார், கபிலன், இயக்குநர் பாலா, இசையமைப்பாளர் வித்யாசாகர், பாடகர்கள் மது பாலகிருஷ்ணன், திப்பு, பாம்பே ஜெயஸ்ரீ, ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வம், எடிட்டர் விட்டல், புகைப்படக் கலைஞர் நேஷனல் செல்லையா, திரைப் பத்திரிக்கை ஆசிரியர் அதிவீரபாண்டியன்,

டிவி இயக்குநர்கள் சி.ஜே.பாஸ்கர், விடுதலை, நடிகர்கள் வேணு அரவிந்த், போஸ் வெங்கட், நடிகைகள் மவுனிகா, தீபா வெங்கட், தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், நடிகர் அலெக்ஸ், நாட்டுப்புற இசைக் கலைஞர் ஆக்காட்டி ஆறுமுகம், நாட்டுப்புற இசை ஆய்வாளர் டாக்டர் கே.ஏ.குணசேகரன், ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருது, கரகாட்டக் கலைஞர் அம்மச்சி வீராமதி.

எழுத்தாளர் பாலகுமாரன், கவிஞர் வண்ணதாசன், கலாப்பிரியா, சுப.வீரபாண்டியன், மரபின் மைந்தன் முத்தையா, கீதா ராஜேசகர், சஞ்சை சுப்ரமணியம், ஸ்ரீவத்சவா, சரஸ்வதி ராஜகோபாலன், டாக்டர் ரா.செல்வகணபதி, இறையன்பன் குத்தூஸ், இஞ்சிக்குடி சுப்ரமணியன், மலைக்கோட்டை சுப்ரமணியன்,

பரதநாட்டிய ஆசிரியர் கிரிஜா பக்கிரிசாமி, பரதநாட்டியக் கலைஞர்கள் திவ்யா கஸ்தூரி, சிந்தூரி, நாட்டிய நாடகக் கலைஞர் நங்கை நர்த்தகி நடராஜ், முத்தரசி, கவிஞர் இன்குலாப், பேராசிரியர் ராஜு, தங்கராஜ் என்கிற எம்.எல்.ஏ தங்கராஜ், திருச்சி மூர்த்தி, பழம்பெரும் நடிகை வி.ஆர்.திலகம் ஆகியோர்.

சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்கிக் கெளரவிப்பார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil