»   »  அஜீத், பாவனா, ஏ.ஆர். ரஹ்மானுக்குபிலிம்பேர் விருது

அஜீத், பாவனா, ஏ.ஆர். ரஹ்மானுக்குபிலிம்பேர் விருது

Subscribe to Oneindia Tamil

அஜீத், பாவனா, ஏ.ஆர்.ரஹ்மான், பசுபதி, சரண்யா உள்ளிட்டோருக்கு பிலிம்பேர் விருது கிடைத்துள்ளது.

சிறந்த தமிழ்ப் படம் மற்றும் கலைஞர்களுக்கான 54வது பிலிம்பேர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகளுக்கு அடுத்து தேசிய அளவில் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படுவது பிலிம்பேர் விருது.

ஒவ்வொரு மாநிலத் திரைப்படங்களுக்கும் தனித் தனியாக விருதுகள் வழங்கப்படுவது இந்த பிலிம்பேர் விருதின் சிறப்பம்சம். இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை டைம்ஸ் குரூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

வரலாறு படத்தில் சிறப்பாக நடித்த அல்டிமேட் ஸ்டார் அஜீத், சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டுள்ளார். சித்திரம் பேசுதடி படத்தில் அருமையாக நடித்த பாவனாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. அவருக்கு பிலிம்பேர் விருது கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. அந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிப் படங்களிலும் விருது பெற்ற கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள கலைஞர்களின் பட்டியல்

சிறந்த நடிகர் - அஜீத் குமார் (வரலாறு)
சிறந்த நடிகை - பாவனா (சித்திரம் பேசுதடி)

சிறந்த துணை நடிகர் - பசுபதி (ஈ)
சிறந்த துணை நடிகை - சரண்யா (எம் மகன்)

சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர். ரஹ்மான் (சில்லுன்னு ஒரு காதல்)

சிறந்த பின்னணிப் பாடகர் - காணா உலகநாதன் (வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் - சித்திரம் பேசுதடி)
சிறந்த பின்னணிப் பாடகி - ஷ்ரேயா கோஷல் (முன்பே வா அன்பே வா -சில்லுன்னு ஒரு காதல்)

சிறந்த பாடலாசிரியர் - நா. முத்துக்குமார் (வெயிலோடு விளையாடி - வெயில்)
சிறந்த இயக்குநர் - வசந்தபாலன் (வெயில்)
சிறந்த படம் - வெயில்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil