»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தேசிய விருது பெறும் சிறந்த தமிழ் படமாக பாரதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் 3 விருதுகளும் இந்தப்படத்துக்குக் கிடைத்துள்ளன.

பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்துக்கு சிறந்த திரைக் கதைக்கான விருது வழங்கப்படவுள்ளது.

சிறந்த பின்னணி பாடருக்கான விருது பெற சங்கர் மகாதேவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கண்டுகொண்டேன்,கண்டுகொண்டேன் படத்தில் இல்லை...இல்லை சொல்ல ஒரு கணம் போதும் பாடலை சிறப்பாகப் பாடியதற்காக இவருக்கு இந்தவிருது வழங்கப்படுகிறது.

சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணிக்கு வழங்கப்படுகிறது. பாரதி படத்தில்மயில் போல... பாடலை பாடியதற்காக பவதாரிணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விக்ரமன் இயக்கி விஜயகாந்த் நடித்த வானத்தைப் போல படத்துக்கு சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான விருதும் தங்கத்தாமரை விருதும் வழங்கப்படவுள்ளது.

முரளி-பார்த்திபன் நடித்து சேரன் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு படத்துக்கு சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான விருதுவழங்கப்படவுள்ளது.

நிலாக் காலம் படத்தில் நடித்த சிறுவன் உதய ராஜ் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளான்.

2000ம் ஆண்டுக்கான தேசிய விருதைப் பெறும் படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகராக அனில் கபூரும், சிறந்த நடிகையாக ரவீணா டன்டணும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த டைரக்டருக்கான விருது உத்சாப் வங்காள மொழிப் படத்தை எடுத்த ரிதுபர்னோ கோசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புகார் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அனில் கபூருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. (இவர் எந்த வகையில் பாரதி படத்தில்பாரதியாகவே வாழ்ந்து காட்டிய சாயாஜி ஷிண்டேயைவிட நன்றாக நடித்தார் என்று தெரியவில்லை). தாமன் படத்தில் நடித்தரவீணாவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது.

சிறந்த இசையமைப்பாளராக ரெபியூஜி படத்தில் இசையமைத்த அனு மாலிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாரதி:

சிறந்த தமிழ் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரதிக்கு மேலும் 3 விருதுகள் கிடைத்துள்ளன.

இந்தப் படத்தில் சிறப்பாகப் பாடிய இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருதுவழங்கப்படுகிறது.

சிறந்த உடையலங்காரத்துக்கான தேசிய விருதும், சிறந்த செட்கள் அமைத்ததற்கான தேசிய விருதும் பாரதி படத்துக்குக்கிடைத்துள்ளது. இந்தப் பணிகளை மேற்கொண்டவர் பி. கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு 2 தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

பாரதிக்கு மட்டுமே ஒரே படத்துக்கு 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மலையாளம்:

மலையாள, ஹிந்தி படங்கள் தலா 9 விருதுகளை வென்றுள்ளன. சயனம் மலையாளப் படத்துக்கு இந்திரா காந்தி விருதுவழங்கப்படுகிறது.

விருதுக் கமிட்டியின் தலைவர்களான வைஜயந்திமாலா பாலி, ஜான் மேத்யூ மத்தன், பாரதி பிரதான் ஆகியோர் இந்த விருதுகளைஅறிவித்தனர். மொத்தம் 17 பேர் கொண்ட கமிட்டி சுமார் 128 படங்களைப் பார்த்து விருது பெற்ற படங்களைத் தேர்ந்தெடுத்தது.

வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்த விருதுகளை ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் வழங்குவார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil